நடு ராத்திரில மனைவிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த கணவர்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திரிபுரா மாநிலத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் தனது மனைவிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் அந்த மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | நடுவானத்துல திடீர்னு திறந்த விமானத்தின் கதவு.. 20 நிமிஷம் உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு பயணிகள் செஞ்ச காரியம்..

சந்தேகம்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் சந்தேகித்ததாகவும் அதன் காரணமாக அவ்வப்போது சச்சரவுகள் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அந்த கணவர் தனது மனைவிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளார்.

திருமணம்

திரிபுரா மாநிலத்தின் தெலியமுரா காவல் நிலைய பகுதி அருகே அமைந்துள்ள மத்திய கிருஷ்ணாபூர் பகுதிக்கு கடந்த சனிக்கிழமை தனது மனைவியை அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த கணவர். வயல் பகுதிக்கு மனைவியை கூட்டிச்சென்ற கணவர் திடீரென அவரை தாக்கத் துவங்கியுள்ளார். மேலும், அதே பகுதியை சேர்ந்த சிலரும் அந்த பெண்ணை தாக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பெண் காதலித்ததாக கூறப்படும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்துவைக்கவும் முயற்சித்துள்ளனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கே மயக்கமாக இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் உட்பட 15 பேர் தன்னை வயல்வெளிக்கு அழைத்து சென்றதாகவும் அங்கே அவர்கள் தன்னை தாக்கியதாகவும் தனது காதலன் எனக் கூறப்படும் இளைஞரை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தான் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தெலியமுரா சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி (SDPO) சோனாசரன் ஜமாத்தியா பேசுகையில்," உண்மைச் சம்பவத்தை அறிய பாதிக்கப்பட்டவரைச் சந்திக்க ஒரு குழுவை அனுப்ப இருக்கிறோம். காவல்துறைக்கு இதுவரை எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை. ஆனால் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்" என்றார். இந்த சம்பவம் குறித்து இதுவரையில் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடையே காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திரிபுராவில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கட்டாய திருமணம் செய்துவைத்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "நல்லா இரு.. வேலைக்கு போற ஒருத்தர கல்யாணம் செஞ்சுக்கோ"..வாட்சாப் மூலம் மனைவிக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கணவன் எடுத்த பகீர் முடிவு.!

TIRIPURA, WOMAN, HUSBAND, MARRY LOVER, திருமணம், கணவர், போலீஸ், விசாரணை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்