ஏன்?.. ‘என் சொந்த நாட்டுலயே என்னால பாதுகாப்பை உணரமுடியல’! தனி ஒருத்தியாக போராடி அதிர வைத்த இளம்பெண்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி பெண் ஒருவர் தனியாளாக நாடாளுமன்றத்தின் போராட்டம் நடத்தினார்.
டெல்லி நாடாளுமன்ற வளாகம் முன்பு அனு தூபே என்ற இளம்பெண் திடீரென அமர்ந்து ‘ஏன்? என் சொந்த நாட்டில் என்னால் பாதுகாப்பை உணரமுடியவில்லை’ என்ற பதாகையுடன் போராட்டம் நடத்தினார். உடனே அங்கு வந்த காவல் துறையினர், ஜந்தர் மந்தர் பகுதியில் சென்று போராடுமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால் இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், ‘சொந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாக உணரமுடியவில்லை’ என தெரிவித்து தேம்பி அழுதுள்ளார். ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். அதேபோல் சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 25 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவங்களால் அப்பெண் தனி ஒரு ஆளாக போராடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் இனிமேல் ஈடுபட வேண்டாம் என அப்பெண்ணை போலீசார் அறிவுறுத்தி அனுப்பியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என் பொண்ண சிதைச்சிட்டாங்களே'...'நான் சொல்ற தண்டனைய கொடுங்க'...பிரியங்காவின் தாய் ஆவேசம்!
- ‘மருத்துவர் பிரியங்கா’ கொலை செய்யப்பட்ட.. ‘அதே பகுதியில்’ எரிந்த நிலையில் ‘மற்றொரு பெண் சடலம்’.. ‘உறைய வைக்கும் சம்பவம்’..
- ‘பிராங்க் ஷோ என நம்ப மறுத்த இளம்பெண்’... 'இன்ப அதிர்ச்சி கொடுத்த தம்பதி'... 'கலங்க வைத்த சம்பவம்'!
- 'சட்டக் கல்லூரி' மாணவியைக் கடத்தி.. கத்தி முனையில் 12 ஆண்களின் வெறிச்செயல்.. பதைபதைக்கும் சம்பவம்!
- ‘பலத்த மழை’.. ‘அதிவேகத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்’.. ‘நள்ளிரவில்’ வீட்டிலிருந்த குழந்தை உட்பட 3 பேருக்கு பயங்கரம்’..
- ‘பைக் பஞ்சர்’.. ‘ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்’.. ‘எரிந்த நிலையில்’ சடலமாக மீட்கப்பட்ட.. ‘பெண் மருத்துவருக்கு’ நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்..
- 'எங்க சண்ட ரொம்ப உக்ரமா இருக்கும்'...'மாணவிகளுக்குள் நடந்த சண்டை'... வைரலாகும் வீடியோ!
- ‘பெண்ணுடன் அறை எடுத்து தங்கிய அதிகாரி’.. ‘காலையில் காத்திருந்த அதிர்ச்சி’.. கோயம்பேடு ஹோட்டலில் பரபரப்பு..!
- ‘அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’! ‘கணவருடன் செல்லும்முன் ஆசையா கொடுத்த அம்மா ’.. தம்கட்டி சாப்பிட்ட மணப்பெண்..! வைரல் வீடியோ..!
- ‘ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள்’! ‘அத்துமீறிய பெயிண்டர்’.. மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்..!