'இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பு'.. 'வெள்ளத்துக்கு நடுவுல இப்படியா?'.. வைரல் ஆகும் போட்டோ, வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாட்னாவில், கொட்டித் தீர்த்த மழையின் காரணமாக நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையிலும், மாடல் அழகி ஒருவர் விதவிதமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ள சம்பவம் பரவி வருகிறது.
பாட்னாவில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் பயின்ற அதிதி சிங் என்கிற பெண்தான் இந்த வெள்ளச் சூழலில், வெள்ளம் சூழ்ந்த சாலைகளின் நடுவே, மாடல் அழகிக்கே உண்டான ஆடையை அணிந்தபடி, இந்த வைரலான போட்டோ ஷூட்டினில் பங்கேற்றுள்ளார்.
ஆனால் இந்த ரணகளத்திலும் இப்படி ஒரு கிளுகிளுப்பு தேவையா? இந்த வெள்ளத்தை, இயற்கை பேரிடரை நீங்கள் இப்படி உங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளத்தான் வேண்டுமா? என்பன போன்ற கேள்விகள் இணையவாசிகளிடம் இருந்து ஏராளாமாய் வரத் தொடங்கிவிட்டன. அதுமட்டுமல்லாமல், இந்த ஆல்பம் போட்டோ ஷூட்டுக்கு தலைப்பாக, ‘வெள்ளத்திற்கு நடுவில் ஒரு தேவதை’ என்று வைக்கப்பட்டுதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மியாவ் ஸ்டூடியோ என்கிற போட்டோகிராபிக் ஏஜென்ஸியின் கீழ் இந்த புகைப்பட ஆல்பத் தொகுப்புகளை எடுத்த, அனுராஜ் இதுபற்றி பேசும்போது, விமர்சனம் செய்வது எளிது, ஆனால் இத்தகைய சூழலில் ஒரு மெசேஜை கடத்துவது கடினம் என்று கூறியதோடு, எத்தனை சிரமப்பட்டு வெள்ளத்தின் நடுவே இப்படி ஒரு போட்டோ ஷூட் எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திரண்டு வரும் வெள்ளத்தில் டிக்டாக்'.. 'இப்பதானே ஒருத்தர இழந்தோம்?'.. '20 அடி உயர பாலத்தில் இருந்து'.. பதறவைத்த இளைஞர்!
- ‘கரைபுரண்டோடிய வெள்ளத்தை கடக்க முயன்ற லாரி’ ‘நடுவழியில் சிக்கிகொண்ட பள்ளி மாணவிகள்’.. பதற வைத்த வீடியோ..!
- 'ஏய்.. என்ன பண்ற?'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா?'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்!
- ‘ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண்’.. ‘நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘வைரலாகும் போதை ஆசாமியின்’.. ‘வடிவேலு காமெடி வீடியோ’..
- அம்மாடியோவ்! 'நாக்க' வச்சு...70 லட்ச ரூபாய் 'சம்பாதிச்ச' பொண்ணு!
- 'வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதலியை’... 'பயமுறுத்த காதலன் செய்த காரியம்'!
- 'தெரியும் இது உங்க வேலைதான்னு'.. 'அம்மா..அப்பா.. உங்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ்'.. இணையத்தை 'தெறிக்கவிட்ட' 9 வயது சிறுமியின் கடிதம்!
- ‘பின்னோக்கி இறங்கியபோது’.. ‘லிஃப்ட் கதவில் சிக்கிய குழந்தை போராடி மீட்பு’..
- ‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..