‘அண்ணே.. என்ன யாரோ கடத்திட்டாங்க’.. தங்கச்சியை காப்பாத்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய அண்ணன்.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சகோதரனிடம் பணம் பறிப்பதற்காக பெண் ஒருவர் கடத்தல் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

டெல்லியில் உள்ள மெஹ்ராலி காவல் நிலையத்தில் நபர் ஒருவர், தனது சகோதரியை மர்ம நபர்கள் கடத்தி வைத்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். மேலும் தனது சகோதரியின் செல்போனில் இருந்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து சகோதரியை கட்டி வைத்திருந்த போட்டோவையும் போலீசாரிடம் காண்பித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடத்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற போலீசார், அப்பெண் வீட்டை விட்டு கடைசியாக சென்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. ஆனாலும் அந்த செல்போனில் வாட்ஸ் அப்பில் இருப்பதை கண்டறிந்தனர். இதனை பயன்படுத்தி தொழில்நுட்ப உதவியுடன், அப்பெண் ஆக்ராவில் இருப்பதை போலீசார் கண்டடுபிடித்தனர்.

இதனை அடுத்து ஆக்ராவுக்கு சென்ற போலீசார், செல்போனில் சிக்னலின் அடிப்படையில், சுமார் 50 ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனை செய்தனர். அப்போது ஆக்ராவில் உள்ள தாஜ்கஞ்ச் மார்க்கெட்டில் உள்ள ஒரு ஹோட்டலை சோதனை செய்தபோது, ​​​​அப்பெண்ணை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அப்பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, தன்னை யாரும் கடத்தவில்லை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக தனது சகோதரனிடம் இருந்து பணம் பறிப்பதற்காக இவ்வாறு கடத்தல் நாடகமாடியதாகவும் அப்பெண் கூறியுள்ளார். மேலும், தனது கைகளை தானே கட்டிக்கொண்டு, ஒரு செயலியின் மூலம் ஆண் குரல் போல் மாற்றி சகோதரனை மிரட்டி பணம் கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து அப்பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார், அவரை கைது செய்து செய்து டெல்லி அழைத்துச் சென்றனர்.

BROTHER, SISTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்