"ஆர்டர் செஞ்சது 12,000 ரூபா டூத் ப்ரஷ், ஆனா பார்சல்ல வந்தது..".. பெண் வாடிக்கையாளரின் வைரல் Tweet.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஷாப்பிங் செய்யும் பழக்கம் ஏராளமான மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
நேராக கடைகளுக்கு சென்று பொருட்களை பார்த்து பார்த்து வாங்குவதை விட போனில் மிகவும் நிதானமாக தங்களுக்கு தேவைக்கேற்ப, விலை உள்ளிட்ட விஷயங்களையும் மிக பொறுமையாக பார்த்து தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து கொள்வதால் பலரும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளை பயன்படுத்தியும் வருகின்றனர். வாடிக்கையாளர்கள் பயன்பாடு அதிகமாக இருப்பதன் காரணமாக பண்டிகை காலங்களில் பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடிகளையும் அறிவிக்கின்றன.
அதே வேளையில், ஆன்லைன் மூலம் சில நேரங்களில் நாம் ஆர்டர் செய்யும் பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களும் நமது வீட்டை வந்து சேரும் விஷயம் நிறைய நடப்பதையும் நாம் கேள்விப்பட்டிருப்போம். தற்போது அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான், இணையத்தில் அதிகம் வைரலாகி பலரது கவனம் பெற்றும் வருகிறது.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் ஆன்லைனில் எலக்ட்ரிக் டூத் பிரஷ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் மதிப்பு சுமார் 12,000 ரூபாய் வரை இருக்கும் சூழலில் டெலிவரியும் அந்த பெண்ணின் வீடு தேடி வந்துள்ளது. ஆனால் அதில் டூத் பிரஷ் இருப்பதற்கு பதிலாக மசாலா பொருட்கள் அடங்கிய பெட்டிகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது அந்த பெண்ணை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு வந்த பார்சல் குறித்து அவரது மகள் டூத் பிரஷ்ஷூக்கு பதிலாக மசாலா பொருட்கள் வந்ததையும் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் டீலர்ஸ் குறித்தும் தனது கேள்வியை அந்த பெண் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. லிவிங் டுகெதரில் இருந்த வாலிபர் செஞ்ச பயங்கரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்..!
- 9 பேருடன் கல்யாணம்.. எல்லார்கிட்டயும் சொன்ன ஒரே பொய்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
- "வாய்க்குள்ள இருந்த பல்லை மறந்துட்டீங்களே பாஸ்".. 15 வருஷ தலைமறைவு.. குற்றவாளியை காட்டிக் கொடுத்த தங்கப்பல்!!
- ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. சந்தேகப்பட்ட அக்கம் பக்கத்தினர்.. விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் தகவல்கள்..!
- கிரைண்டரில் சிக்கிய துப்பட்டா.. திடீர்னு கேட்ட அலறல் சத்தம்.. பிறந்தநாள் அன்று இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக்கிடந்த இளம்பெண்.. பறிபோன பார்வை.. மருத்துவர் கொடுத்த '20-20-20' அட்வைஸ்.. என்னப்பா அது..?
- இன்னும் 3 நாளுல கல்யாணம்.. 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!
- பிறந்தநாளில் மாணவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!
- ஆசையாய் வளர்த்த நாயின் மரண சோகம் தாங்காத இளம்பெண்.. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு
- "37 வருஷம் முன்னாடி நடந்த கொலையில் ஒரு கனெக்ட் இருக்கு".. 31 வயசு பெண்ணுக்கு வந்த போன் கால்.. "ஒரு நிமிஷம் பேச்சு மூச்சே வரல"