'வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்'... 'விபரீத முடிவு எடுத்த இளம்பெண்'... பதறிப்போன ஊழியர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேலையைவிட்டு நீக்கியதால் அலுவலக மொட்டை மாடியில் ஏறி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டிய இளம்பெண் ஒருவரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தில், வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை நிர்வாகம் பணியில் இருந்து நீக்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் பல மாடி கட்டிடங்கள் கொண்ட நிறுவனத்தின் மொட்டைமாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

மொட்டை மாடியின் உச்சியில் பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்களும், நிர்வாகத்தினரும் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பெண் கீழிறங்கி வர மறுத்துவிட்டார். இதையடுத்து தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் காவல்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, அந்தப் பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.  

அப்போதும் கீழிறங்கி வர மறக்கவே, பணிநீக்கம் செய்யப்பட்ட அந்தப் பெண்ணின் விபரீத முடிவை அடுத்து, நிர்வாகம் மீண்டும் அவரைப் பணியில் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தனர். அதன்பின்னரே அப்பெண் கீழிறங்கி வர சம்மதித்தார். இந்தச் சம்பவம் குருகிராமில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை பதறவைத்துள்ளது.

DRAMA, BIZARRE, SUICIDEATTEMPT, JOB

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்