“மாணவிகள்.. பெற்றோர்.. ஆசிரியர்கள்.. அத்தன பேரயும் ‘அந்த மாதிரி’ மார்ஃபிங் பண்ணியிருக்கேன்.. எவ்ளோ தருவீங்க?”.. 'மிரளவைத்த' பெண்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள சில பள்ளிகளில் பயிலும் மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அங்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களின் சமூகவலைதள புரொஃபைல் போட்டோக்களையும், கைகளில் கிடைக்கும் ப்ரிண்ட் செய்யப்பட்ட போட்டோக்களையும்  கலெக்ட் செய்து, அவற்றை மார்ஃபிங் செய்திருக்கிறார் ஒரு பெண்மணி.

அதன் பின்னர் வெவ்வேறு பள்ளி நிர்வாகங்களை அணுகியும் சிலரது பெற்றோர்களைத் தொடர்புகொண்டும், தான் சைபர் க்ரைமில் இருந்து வரும் ஐடி ஊழியர் என்றும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புகைப்படங்கள் இணையத்தில் உள்ளதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். ஆனால் பள்ளி நிர்வாகங்கள் அவற்றுக்கு ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என தெரிகிறது.

இதனை அடுத்து, தான் வைத்திருக்கும் மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அவர்களுக்கு அனுப்பி, அவை இணையத்தில் பதிவேற்றப்படும் என கூறி மிரட்டி, பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து பள்ளி நிர்வாகங்களும், பெற்றோர்களும் அளித்த புகாரின் பேரில் அந்த பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

SCHOOLSTUDENT, HYDERABAD, CYBERCRIME, POLICE, WOMAN, BLACKMAIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்