"ஹலோ.."தண்டவாளத்தின் அடியில் சிக்கியும், ரயில் போகும் வரை கூலாக போன் பேசிவிட்டு எழுந்து வந்த இளம் பெண்! யாரும்மா நீ?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய காலகட்டத்தில், நாம் பலரும் சமூக வலைதளத்தில் அதிக நேரத்தினை செலவிட்டு வருகிறோம். இதில், நாளுக்கு நாள் சில வீடியோக்களும் மக்கள் மத்தியில் அதிகம் வைரல் ஆவதும் உண்டு.
அதிலும் குறிப்பாக, ரெயில் தண்டவாளத்தில் வைத்து, மக்கள் தெரியாமல் விபத்தில் சிக்கி, பின் அதிலிருந்து தப்பித்து விடும் அதிர்ச்சி வீடியோக்கள் வெளியாகும்.
உதாரணத்திற்கு, சென்று கொண்டிருக்கும் ரெயிலில் ஏற முற்படும் ஒருவர், தவறுதலாக கீழே விழுந்த பிறகு, அருகிலுள்ளவர்கள் காப்பாற்றி உயிர் பிழைக்க வைக்கும் வீடியோக்கள், மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கும்.
இதனை வீடியோவில் கண்டாலும், நம் அருகே நடைபெறுவது போன்ற உணர்வை நம்மில் கடத்திச் செல்லும். இது ஒருபுறம் இருக்க, ரெயில் நிலையம் அல்லது தண்டவாளம் அருகே, தங்களுக்கு வரப் போகும் ஆபத்தினை கொஞ்சம் கூட உணராமல், கவனக்குறைவால் விபத்தில் சிக்கி நிகழ்ந்த துயர சம்பவங்கள் பற்றியும் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேகமாக வந்த ரெயில்
ஐபிஎஸ் அதிகாரியான டிபான்ஷு காப்ரா என்பவர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், சரக்கு ரெயில் ஒன்று அருகே வந்ததும், பெண் ஒருவர் ரெயில் தண்டவாளம் நடுவே குறுக்காக படுக்காமல், நேர்கோட்டில் படுத்து கிடக்கிறார்.
ரெயில் அருகே வருவது தெரிந்ததும், அப்படியே தண்டவாளத்தில் அந்த பெண் படுக்க முடிவு செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, ரெயிலும் அந்த பெண்ணுக்கு எந்தவித ஆபத்தையும் நிகழாத வகையில் கடந்து செல்கிறது.
ரெயில் போனதும் பெண் செய்த விஷயம்
ஆனால், ரெயில் தாண்டி சென்றதும், எந்தவித காயமும் இன்றி தப்பித்த அந்த பெண் செய்த ஒரு விஷயம் தான், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ரெயில் கடந்து சென்றதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், எதுவும் நடக்காதது போல அந்த பெண் யாரிடமோ தொலைபேசியில் பேசிக் கொண்டே எழுந்து செல்கிறார். இது பற்றி, ஐபிஎஸ் டிபான்ஷுவும், தன்னுடைய கேப்ஷனில், "போனில் Gossip பேசுவது தான் இப்போது ரொம்ப முக்கியம்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றிய விவரங்கள் சரிவர தெரியவில்லை. ஆனால், இது தொடர்பான வீடியோக்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பச்சிளங்குழந்தை 'செய்த' விஷயம்.. "ப்பா, அச்சு அசல் புஷ்பாவே தான்.." இணையத்தை கலக்கும் வீடியோ
- விமானம் ஏறிய இளம்பெண்ணுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்.. "இந்த வாய்ப்பு எல்லாம் எங்களுக்கு எப்போ கிடைக்குமோ??".. ஏங்கும் நெட்டிசன்கள்
- உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி.. கண்ணீர் விடும் பெற்றோர்.. வாட்ஸ் அப் மூலம் கதறும் மாணவர்கள்
- "ஏன் முரட்டு சிங்கிளா இருக்காங்க தெரியுமா".. "அவங்கள அப்படி சொல்லாதீங்க பாவம்".. ஆண்களுக்காக குரல் கொடுத்த பெண்
- பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு.. பணம் கேட்டு தொந்தரவு செய்த மகன்.. தாயின் செயலால் நெகிழ்ந்த போலீஸ்
- IPL 2022: சாமியை மறந்த ரசிகர்கள்.. தோனியை சுற்றி வளைத்த கூட்டம்.. அன்பால் நெகிழ்ச்சியடைந்த தோனி!
- "இவரை கொஞ்சம் கண்டுபிடிச்சு தாங்கப்பா".. ஆனந்த் மஹிந்திராவை நெகிழ்ச்சியடைய வைத்த நபர்!
- ரயில்வே டிராக்கில் இருசக்கர வாகனத்துடன் சறுக்கிய நபர்..100 கிமீ வேகத்தில் வந்த ரயில்.. கதிகலங்கும் வீடியோ..!
- அந்த மனசு தான் சார் கடவுள்.. ரயில் டிராக்கில் நடந்த திக்திக் நிமிடங்கள்... ஹீரோ மாதிரி வந்த நபர்..
- எனக்கு 19, அவனுக்கு 13.. நாங்க 2 பேரும் 'Twins'.. தலைச் சுற்ற வைத்த பெண்.. பின்னணி என்ன?