'எனக்கென யாரும் இல்லையே'.. இன்ஸ்டாவில் உருட்டித் தள்ளிய இளைஞர்.. உதவி செய்யப்போய் வம்புல மாட்டிக்கிட்ட இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னிடம் பழகிவந்த நபரிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கிறார். மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | 800 கிடா.. 100 மூட்டை அரசி.. ஆண்களுக்கு மட்டும் நடைபெற்ற பிரம்மாண்ட விருந்து.. 200 வருஷமா இப்படித்தானாம்..!

இணைய சேவையின் வளர்ச்சி பல கொடைகளை மனித சமுதாயத்துக்கு வழங்கியுள்ளன. சமூக ஊடங்களின் வளர்ச்சி அதன் ஒரு பலனாகவே மக்களுக்கு கிடைத்தது. உலகை நம்முடைய உள்ளங்கைக்கு கொண்டுவரும் இந்த சமூக வலை தளங்கள் மூலமாக பல முக்கிய தகவல்களை நாம் உடனுக்குடன் அறிந்துகொள்ள முடிகிறது. இப்படி பல நன்மைகள் இருப்பினும், சிலர் இதனை பயன்படுத்தி தகவல் திருட்டு, பணம் பறித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் முன்பின் தெரியாத நபரை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்திருக்கிறார்.

எனக்கென யாரும் இல்லையே

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒருவர் அறிமுகமாகியுள்ளார். சிரியா நாட்டில் உள்ள ராணுவ முகாமில் தான் பணியாற்றி வருவதாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார் அவர். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகிவந்த நிலையில் தனக்கு சொந்தம் பந்தம் என யாரும் இல்லை எனவும் அதனால் தன்னிடம் உள்ள நகை மற்றும் பணத்தை அனுப்பி வைப்பதாகவும் அதனை பத்திரமாக பாதுகாத்து வைக்கும்படியும் உருட்டியுள்ளார் அந்த ஆசாமி.

இளம்பெண்ணும் அதனை நம்பியிருக்கிறார். அப்போதுதான் தனது வலையை வீசியிருக்கிறார் அந்த இளைஞர். அதாவது வெளிநாட்டிலிந்து அனுப்புவதால் சுங்க வரி செலுத்த செலுத்தவேண்டும் எனவும் தன்னிடம் பணம் குறைவாக இருப்பதாகவும் கூறவே இளம்பெண்ணும் பணம் அனுப்பியுள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக 15 லட்ச ரூபாயை அந்த இளைஞருக்கு அனுப்பியுள்ளார்.

சந்தேகம்

அதன்பிறகு தனக்கு மேலும் 10 லட்ச ரூபாய் வேண்டுமென அந்த இளைஞர் கூறவே, அப்போதுதான் இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. சுதாரித்துக்கொண்ட இளம்பெண், பணம் அளிக்க முடியாது எனக்கூறி இதுவரையில் அனுப்பிய பணத்தை திரும்பிக் கொடுக்கும்படி கூறியுள்ளார். அதனுடன் மெசேஜ் அனுப்புவதை அந்த நபர் நிறுத்தவே, அதிர்ச்சியடைந்த இளம்பெண் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Also Read | கூட்டமான மெட்ரோ ரயிலில் Casual உடையுடன் பயணம் செஞ்ச துபாய் இளவரசர்.. யாருமே கண்டுபிடிக்கலையாம்.. வைரலாகும் புகைப்படம்..அதுவும் எதுல தெரியுமா?

MUMBAI, WOMAN, CONTACT, INSTAGRAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்