எப்போதும் செல்போனிலேயே மூழ்கிக்கிடந்த இளம்பெண்.. பறிபோன பார்வை.. மருத்துவர் கொடுத்த '20-20-20' அட்வைஸ்.. என்னப்பா அது..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிகமான செல்போன் பயன்பாடு காரணமாக கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து மீண்டிருக்கிறார். இது குறித்து மருத்துவர் எழுதியுள்ள பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இணையமும் சமூக வலைத் தளங்களின் வளர்ச்சியும் இன்றைய நவீன காலத்தில் பல விஷயங்களை நாம் செய்வதற்கு உதவிகரமானதாக இருக்கின்றன. நொடிப் பொழுதில் நமக்கு தேவையான தகவல்களை நம்மால் பெற முடிவதோடு, உலகத்தின் மறு பாதியில் இருக்கும் நபர்களோடும் நம்மால் உரையாடவும் முடிகிறது. அதே வேளையில் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என சொல்வதைப் போல அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடும் ஆபத்து என தொடர்ந்து மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர். சுதீப் குமார். இவரிடத்தில் சமீபத்தில் மஞ்சு எனும் இளம் பெண்மணி சிகிச்சைக்காக வந்திருக்கிறார். தன்னுடைய குழந்தையை பராமரிப்பதற்காக வேலையை ராஜினாமா செய்த அவர் வீட்டிலேயே இருந்திருக்கிறார். அப்போது பல மணி நேரம் தொடர்ந்து செல்போன்களை பயன்படுத்தி வந்திருக்கிறார். சொல்லப்போனால் இரவு நேரத்திலும் வெளிச்சம் அதிகம் இல்லாத அறையில் செல்போனை பயன்படுத்தி இருக்கிறார் இவர்.
Images are subject to © copyright to their respective owners.
இதனால் அவருடைய பார்வை குறையும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. சில நேரங்களில் பார்வை குறைவும் ஏற்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து சில வினாடிகளுக்கு எதையுமே பார்க்க முடியாத சூழ்நிலையில் மஞ்சு சிக்கிக்கொள்ள உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அவரை பரிசோதித்த கண்மருத்துவர் மூளை நரம்பியல் நிபுணரான சுதிரை சந்திக்கும்படி மஞ்சுவிடம் கூறியிருக்கிறார். அப்போது மஞ்சுவிற்கு மருந்துகளை வழங்குவதற்கு பதிலாக ஆலோசனைகளை கொடுத்திருக்கிறார் டாக்டர் சுதீப்.
மேலும் மஞ்சுவுக்கு ஸ்மார்ட் போன் விஷன் சிண்ட்ரோம் எனப்படும் குறைபாடு ஏற்பட்டதையும் டாக்டர் சுதிர் கண்டறிந்திருக்கிறார். இதனையடுத்து செல்போன் பயன்பாட்டை முழுவதுமாக தவிர்த்துவிடுவதாக மஞ்சு கூறியிருக்கிறார். அப்போது தொடர் ஆலோசனை மூலமாக மஞ்சு படிப்படியாக குணமடைந்து தற்போது பரிபூரணமாக நலமடைந்திருக்கிறார். கணினிகளில் அதிக நேரத்தை செலவிடுபவர்களுக்கும் இந்த சிக்கல் ஏற்படலாம் என எச்சரிக்கும் டாக்டர் சுதிர் ஆலோசனை ஒன்றையும் வழங்கி இருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அதாவது 20 நிமிடங்கள் போனை பயன்படுத்தினால் அடுத்த 20 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். அப்போது 20 அடி தொலைவில் உள்ள பொருட்களை பார்க்கும்படி வலியுறுத்தியுள்ளார் அவர். இதனை 20-20-20 ரூல் என்கிறார்கள் மருத்துவர்கள். டாக்டர் சுதிரின் இந்த பதிவு தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read | பள்ளி மாணவியின் உருக வைக்கும் பாடல்.. ரசித்து கேட்டு பாராட்டிய பிரதமர் மோடி.. வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்னும் 3 நாளுல கல்யாணம்.. 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.!
- பிறந்தநாளில் மாணவிக்கு அடிச்ச ஜாக்பாட்.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்..!
- ஆசையாய் வளர்த்த நாயின் மரண சோகம் தாங்காத இளம்பெண்.. திடீரென எடுத்த அதிர்ச்சி முடிவு
- "37 வருஷம் முன்னாடி நடந்த கொலையில் ஒரு கனெக்ட் இருக்கு".. 31 வயசு பெண்ணுக்கு வந்த போன் கால்.. "ஒரு நிமிஷம் பேச்சு மூச்சே வரல"
- ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
- தோளில் குழந்தை, கையில் கேமரா.. "இந்த பாசத்துக்கு முன்னாடி ஏதாச்சும் ஈடாகுமா?".. மனதை குளிர வைத்த வீடியோ!!
- "அவரு அப்ப சாகல".. 100 வருஷம் முன்னாடி நடந்த குற்றம்.. கடிதங்கள் மூலம் இளம்பெண் கண்டுபிடிச்ச திடுக்கிடும் விஷயம்!!
- "நான் உயிரோட தான் இருக்கேன்".. இறந்த கணவரை உணவகத்தில் பார்த்ததாக பெண் சொன்ன விவகாரத்தில் பரபரப்பு ட்விஸ்ட்..
- பிஸ்கட்டை ஆசையா வாங்கிக்கொண்ட சிறுவன்.. இறங்குற இடம் வந்ததும் நெகிழ வச்சுட்டானேப்பா.. வீடியோ..!
- பிறந்தநாள் Giftனு ஆசையா பிரிச்சு பார்த்தா.. இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே..😅 வீடியோ..!