லாக்டவுனில் சொந்தஊருக்கு ‘தனியாக’ நடந்து சென்ற பெண்.. ‘பள்ளிக்கூடத்தில்’ தங்க வைத்த போலீசார்.. கடைசியில் நடந்த கொடுமை..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஊரடங்கால் பள்ளிக்கூடத்தில் தங்கிய பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து, ரயில், விமானம் போன்ற போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உணவு, இருப்பிடம் போன்ற பிரச்சனையால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாகவே செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தானில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனியாக சொந்தஊருக்கு நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், தான் ஒரு கூழித்தொழிலாளி என்றும், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு நடந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நேரத்தில் தனியாக சென்றால் பாதுகாப்பு இல்லை என போலீசார் எண்ணியுள்ளனர். ஆனால் அப்பகுதியில் அரசாங்க மையங்கள் இல்லாததால் அருகில் உள்ள சவாய் மாதோபூர் கிராமத்தில் தங்க வைக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக அக்கிராம மக்களிடம் போலீசார் உதவி கேட்டுள்ளனர். இதனை அடுத்து அக்கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் அப்பெண்ணை தங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுதொடர்பாக அப்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அந்த கிராமத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கில் பாதுகாப்பிற்காக பள்ளிக்கூடத்தில் தங்கவைக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா வைரஸின் புரத கட்டமைப்பை...' 'புதிய இசை வடிவமாக மாற்றிய விஞ்ஞானிகள்...!' 'எதிரான இசைக்குறிப்பை உருவாக்க முயற்சி...'
- கொரோனாவை விட 'இதுதான்' இப்போ ரொம்ப முக்கியம்... அமெரிக்காவுக்கு 'போட்டியாக' களத்தில் குதித்த சீனா!
- வடகொரிய அதிபர் 'உயிருடன்' தான் இருக்கிறார்... 'மர்மங்களுக்கு' விடையளித்த அதிகாரி!
- 'எம்.பி குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா...' 'எப்படி வந்துச்சுன்னு சந்தேகமா இருக்கு...' தனிமைப்படுத்தி கண்காணிப்பு...!
- 5 வருட 'ரகசிய' திட்டம்... அமெரிக்கா 'அசந்த' நேரம் பார்த்து... அடிமடியில் 'கைவைத்த' சீனா?
- ”ஒருவேளை 'இவர்' பதவிக்கு வந்தால்... கிம் ஜாங் உன்-னை விட 'கொடூரமாக' ஆட்சி புரிவார்?” - உலக அரசியல் ஆய்வாளர்கள்!
- வெளியான 'நல்ல செய்தி' ... 'இந்தியாவில்' முதல்முறையாக கொரோனா பரவல் 'வேகம்' குறைந்தது... என்ன காரணம்?
- குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'
- 'தெருவில்' படுத்துறங்கிய 'போலீஸ்'... "கெடச்ச கேப்புல குட்டி தூக்கம்".. போலீசார்களின் தற்போதைய நிலையை விளக்கும் வைரல் புகைப்படம்!
- '24 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 64 பேருக்கு கொரோனா!'.. சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?