நண்பரின் வீட்டுக்குள் ஒருவாரமாக பதுங்கியிருந்த மனைவி.. கிராமத்தினருடன் சென்று கதவை தட்டிய கணவன்... பதறிப்போன அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, பெண்ணை அவரது கணவர் மற்றும் கிராமத்தினர் தாக்கிய சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | 24 மணிநேரத்துல அடுத்தடுத்து 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கம்..கடும் அச்சத்தில் அந்தமான் மக்கள்..!

மத்திய பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ளது போர்பதாவ் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் தனது கணவரின் வீட்டில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த பெண்மணி அவரது ஆண் நண்பரின் வீட்டில் தங்கியிருப்பதாக கணவருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, கிராமத்தினருடன் அந்த வீட்டுக்கு சென்ற கணவர், சரமாரியாக தனது மனைவியை தாக்க துவங்கியுள்ளார்.

அதிர்ச்சி

கிராம மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணை அவரது கணவர் தாக்கியுள்ளார். கொஞ்ச நேரத்தில் கிராம மக்களும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கியிருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல், செருப்பால் மாலை அணிவித்து, கணவரை தோளில் சுமந்து நடந்துவரும்படியும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். வேறுவழியின்றி, அந்த பெண்மணியும் அவ்வாறே செய்திருக்கிறார். இந்நிலையில், இது குறித்து அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பெண்ணின் கணவர் உட்பட 9 பேரை கைது செய்திருக்கின்றனர்.

கைது

இதுகுறித்து தேவாஸ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூர்யகாந்த் சர்மா கூறுகையில், “ஒரு வாரத்திற்கு முன்பு அந்தப் பெண் காணாமல் போனார். அவரது கணவர் உதய்நகர் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தார். சமீபத்தில், அந்த பெண்ணின் நெருங்கிய நண்பர் என்று கூறப்படும் ஆணின் வீட்டில் அந்த பெண் பதுங்கியிருப்பது அவருக்கு தெரியவந்தது. அந்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்து, கிராம மக்கள் முன்னிலையில் அவரை இழுத்துச் சென்றார். பின்னர், அந்த பெண் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்" என்றார்.

புகார்

இந்த தாக்குதல் குறித்து அந்த பெண்ணின் நண்பர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதன்படி வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் இதுவரையில் 9 பேரை கைது செய்துள்ளனர். மொத்தம் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட பெண், தனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் அடிக்கடி கணவர் தன்னை துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய பிரதேசத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, பெண்ணை அவரது கணவர் மற்றும் கிராமத்தினர் தாக்கிய சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | பூமியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தனது சொத்தில் பங்கு.. உலக கோடீஸ்வரர்களையே திகைக்க வைத்த வாரன் பஃபெட்..!

MADHYA PRADESH, WOMAN, HUSBAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்