போலீஸ் தேர்வில் 200க்கு 171 மார்க் எடுத்த இளம்பெண்.. மெடிக்கல் டெஸ்ட்ல 'ஆண்' என வந்த ரிசல்ட்.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மகாராஷ்டிரா மாநிலத்தில் காவல்துறை தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவ பரிசோதனையில் ஆண் என வந்ததால் வேலைக்குச் செல்லமுடியாத நிலையில் போராடிவந்த இளம்பெண்ணுக்கு வேலை வழங்கக்கோரி உத்தரவிட்டுள்ளது அம்மாநில உயர்நீதிமன்றம்.

Advertising
>
Advertising

200க்கு 171 மார்க்

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நாசிக் ஊரக போலீஸ் தேர்வில் கலந்துகொண்டு 200க்கு 171 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அதிக மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெற்ற அவர் பணியில் சேர்வதற்கு மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருடைய உடலில் குரோமோசோம் மாறுபாடு இருக்கிறதா என்பதை கண்டறியும் காரியோடைப்பிங் என்னும் பரிசோதனையை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இம்யூனோஹெமாட்டாலஜியில் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர் 'ஆண்' என சான்றளித்தனர் மருத்துவர்கள். இந்த அறிக்கையை ஊரக காவல்துறைக்கும் மருத்துவமனை அனுப்பியிருக்கிறது.

காவல்துறையிடமிருந்து பணி குறித்து எவ்வித தகவலும் கிடைக்காத நேரத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நடந்து முடிந்த காவலர் தேர்வில் தன்னுடைய சாதியின் அடிப்படையில் மெரிட்டில் தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்களின் பட்டியலை கோரினார். அதன் அடிப்படையில் வெளிவந்த அறிக்கையில் ஆண்கள் பிரிவில் மெரிட் 182 மதிப்பெண்களுடனும் பெண்களுக்கு 168 மதிப்பெண்களுடனும் முடிவடைவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

கோரிக்கை

இதனையடுத்து சிறப்பு காவல் ஆய்வாளருக்கு கடிதம் ஒன்றை இளம்பெண் எழுதியுள்ளார். அதில்,"எனக்கு 2 தங்கைகள் மற்றும் ஒரு தம்பி இருக்கின்றனர். நான் குடும்பத்தில் மூத்தவள். என்னுடைய பெற்றோர் கரும்பு வெட்டும் கூலிவேலை செய்துவருகின்றனர். என்னுடைய பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு உதவி செய்யவேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விஷயம் நீதிமன்றத்தை எட்டவே 3 ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் எம்.ஜே. ஜம்தார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மகாராஷ்டிர அட்வகேட் ஜெனரல் அசுதோஷ் கும்பகோனியிடம் அந்தப் பெண்ணின் வழக்கை அனுதாபத்துடன் பார்க்கும்படி கேட்டுக் கொண்டது.

தீர்ப்பு

இதனை தொடர்ந்து அந்த பெண் தரப்பில் தற்போது எம்.ஏ படித்துவருவதாகவும் தனக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னுடைய குடும்பத்தை முன்னேற்ற முடியும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள்,"அவர் பெண்ணல்ல என்பதையே அவர்  அறிந்திருக்கவில்லை. இதில் அவரது தவறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால் அவர் தன்னை பெண்ணாகவே கருதுகிறார். கருணை அடிப்படையிலான நோக்கில் அவருடைய பாலினத்தை பார்க்க தேவையில்லை" என்று அறிவித்தனர்.

இந்நிலையில் காவலர் அல்லாத பணிக்கு செல்லவும் அந்தப் பெண் விருப்பம் தெரிவிக்கவே, மாநில அரசு உடனடியாக அந்தப் பெண்ணிற்கு பணி ஆணை வழங்கிடுமாறு உத்திரவைத்துள்ளது மகாராஷ்டிரா மாநில உயர்நீதிமன்றம்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

MAHARASHTRA, HIGHCOURT, POLICE, மஹாராஷ்டிரா, போலீஸ், உயர்நீதிமன்றம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்