VIDEO: பாதி வழியில் டிரைவருக்கு வலிப்பு.. ‘பயப்படாதீங்க பஸ்ஸை நான் ஓட்றேன்’.. கெத்து காட்டிய ‘சிங்கப்பெண்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் ஒருவர் பேருந்தை ஓட்டிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷிரூர் வேளாண் சுற்றுலா மையத்திற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மினி பேருந்தில் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென பேருந்து டிரைவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் இங்கும் சென்ற பேருந்தை சாலையின் நடுவிலேயே அவர் நிறுத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயந்து அழுதுள்ளனர்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த யோகிதா சாதவ் என்ற பெண், சக பயணிகளை ஆசுவாசப்படுத்தியுள்ளார். பின்னர் டிரைவரை பேருந்தில் ஓரமாக அமர வைத்துவிட்டு அவர் பேருந்தை ஓட்டியுள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு பேருந்துடன் சென்ற அவர் டிரைவரை அங்கு அனுமதித்து விட்டு, மற்ற பயணிகளை அவரவர் ஊர்களில் சென்று இறக்கி விட்டுள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த யோகிதா சாதவ், ‘எனக்கு கார் ஓட்டத் தெரிந்ததால் பேருந்து ஓட்டுவதற்கு முடிவு செய்தேன். டிரைவருக்கு சிகிச்சை அளிப்பதுதான் முக்கியமான வேலை என்பதால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றேன்’ என அவர் தெரிவித்துள்ளார். சுமார் 10 கிலோமீட்டர் துணிச்சலாக பேருந்தை ஓட்டி பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் யோகிதா சாதவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

WOMAN, BUS, PUNE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்