‘ஒரே ஒரு ஐ.டி கார்டுதான்’.. 18 மாசம்.. போலீஸையே சல்யூட் அடிக்க வைத்த பெண்.. சிக்கியது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போலி ஐ.டி.கார்டினை தயாரித்து இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாக நடித்து மோசடி செய்துள்ள நொய்டாவைச் சேர்ந்த பெண்மணியை காவல்துறை கைது செய்துள்ளது.

டெல்லியில் எம்.ஏ.அரசியல் படித்த ஷோயா கான் என்கிற பெண் கடந்த 2007-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வு எழுதி, ஆனால் அந்த தேர்வில் வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தவர். எனினும் தேர்வில் தேர்ச்சி அடையாததால் அந்த தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத ஷோயா கான், ஐஏஎஸ் அதிகாரிக்குண்டான புகழ், அதிகார அந்தஸ்துக்கு ஆசைப்பட்டு போலியான அதிகாரியாக திட்டமிட்டுள்ளார்.

பின்னர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிக்குண்டான போலியான ஐ.டிகார்டினையும் போலி மெயில் ஐடியையும் உருவாக்கியுள்ளார். வங்கியில் வேலை பார்த்து வெளியேறிய தனது கணவருக்கும் இப்படியான போலி ஐடி கார்டினை ஷோயா தயாரித்து கொடுத்துள்ளார். சுமார் 18 மாதங்கள் இப்படியாக, போலி அதிகாரியாக வலம் வந்த ஷோயா கானுக்கு காவல்துறையின் தரப்பில் இருந்து போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் பிரதமர் கலந்துகொண்ட உத்தரபிரதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். அப்போதும் கூட ஷோயா கான் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி என நினைத்துக்கொண்டு பல காவலர்கள் இவருக்கு சல்யூட் அடித்துள்ளனர். ஆனால் அப்போது தனக்கு வரவேண்டிய பாதுகாப்பு அதிகாரி வரவில்லை என்று நொய்டாவின் கவுதம் புத்த நகரில் உள்ள காவல் அதிகாரி எஸ்.எஸ்.பி.வைபாவ் கிருஷ்ணாவை போனில் தொடர்பு கொண்டு ஷாயா கான் கடுமையாக பேசியுள்ளார்.

அப்போது சந்தேகமடைந்த காவல்துறையினர், ஷோயாவின் வீட்டை சோதனை செய்து ஷாயா கான் ஒரு போலி வெளியுறவுத்துறை அதிகாரி என கண்டுபிடித்துள்ளன. பின்னர் லேப்டாப், சொகுசு கார் உள்ளிட்ட பலவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஷாயா கானின் போலி ஐடி.கார்டு, போலி இணையதளங்களும் அம்பலமாகின. விசாரித்ததில் இவரின் தொழிலே போலி ஐடி கார்டு தயாரிப்பதுதான் என தெரியவந்ததை அடுத்து ஷோயா கான் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட இன்னும் சிலரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

BIZARRE, CHEAT, FORGERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்