'திருமணம் முடிந்து சந்தோசமா லண்டன் போன தம்பதி'... 'ஆனா கணவருக்கு இப்படி ஒரு கோர முகமா'... மருத்துவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆசையாகத் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்த நிலையில், கணவன் குடும்பத்தின் உண்மையான முகத்தை அறிந்து மருத்துவர் அதிர்ந்து போனார்.

ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாலஹாஸ்தியை சேர்ந்தவர் தேஜஸ்வனி. மருத்துவரான இவருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்துள்ளார்கள். அப்போது விக்ரம் ராவ் என்பவரோடு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் நடைபெற்றது. அவரும் மருத்துவர் என்பதால் தேஜஸ்வனி மகிழ்ச்சியாகத் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பித்தார்.

இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் தேஜஸ்வனி தனது கணவர் மற்றும் குடும்பத்தாருடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். புதிய இடம், புதிய வாழ்க்கை எனப் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. லண்டன் சென்ற பின்னர் தான் அவரது கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் குறித்த உண்மை முகம் தெரிய வந்தது.

2 கோடி வரதட்சணை கொடுக்க வேண்டும் எனக் கணவரின் குடும்பத்தினர் தேஜஸ்வனியை படாத பாடு படுத்தி வந்துள்ளார்கள். பல கொடுமைகளைச் சந்தித்த தேஜஸ்வனி, ஒரு கட்டத்தில் கொடுமைகளைத் தாங்க முடியாமல் லண்டனிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பினார். பின்னர் கணவர் மற்றும் குடும்பத்தாரும் சொந்த ஊருக்குத் திரும்பினர்.

இதையடுத்து கணவர் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்க தேஜஸ்வனி முயன்ற போது வரதட்சணை பணம் கொண்டு வந்தால் தான் இங்கு வந்து வாழமுடியும் எனக் கூறி விக்ரம் மற்றும் அவர் பெற்றோர் தேஜஸ்வனியை வீட்டை விட்டுத் துரத்தியுள்ளனர். ஆனால் அதைக் கண்டு அஞ்சாமல் கணவரின் வீட்டிற்கு முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தேஜஸ்வனியை சமாதானம் செய்ததோடு அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்