‘வெளிய க்ளினிக்’.. ‘ஆனா உள்ள போனாதான் தெரியுது..’ பெண் மருத்துவர் செய்துவந்த அதிர்ச்சி காரியம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தின் போபால் பகுதியில் உள்ளது பார்கேதி எனும் ஏரியா. இப்பகுதியில் இயங்கி வந்த கிளினிக் ஒன்று ரகசியமாக பாலியல் தொழிலை நடத்திவருவதாகவும் எழுந்த புகாரை அடுத்து போலீஸார் அந்த கிளினிக்கை நெருக்கமாக கண்காணித்து வந்தனர்.
அந்த கிளினிக் ஒரு பரபரப்பான ஏரியாவில் அனைவரும் கவனிக்கத்தக்கதொரு இடத்தில் இருந்தாலும் கூட, அங்கு வந்துசெல்லும் பலரின் மீதும் சந்தேகப்பட்ட போலீஸார் அங்கு பாலியல் தொழில் நடப்பதை ஊர்ஜிதப்படுத்தினர். ஆனாலும் கையும் களவுமாக இந்த கும்பலை பிடிக்க, அவர்களுக்கு ஒரு யோசனை உண்டானது.
அதற்கென, போலீஸார் ஒரு பெண் போலீஸாரை அந்த கிளினிக்கிற்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் போலீஸாரோ, அந்த கிளினிக்கிற்கு சென்றபோது கிளினிக்கில் இருந்த 52 வயதான காயத்ரி சிங் என்கிற அந்த பெண் மருத்துவரை சந்தித்து, தனக்கு வேலை வேண்டும் என்றும் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் கூற, அப்போது அந்த பெண் மருத்துவரோ, ‘நீயும் இங்கிருந்து இந்த பாலியல் தொழிலைச் செய்யலாம். நான் அதற்கு உதவுகிறேன்’ என்று வாழ்க்கை கொடுப்பதாக வார்த்தைகள் கொடுத்துள்ளார்.
இப்படிதான் அந்த கும்பலை கூண்டோடு போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இதில் சிக்கிய அந்த பெண் மருத்துவர் தன் கணவரும் மருத்துவர்தான் என்றும், அவர் இறந்த பின்பு கடந்த 2 வருடங்களாக க்ளினிக் என்கிற பெயரில் இந்தத் தொழிலை தான் செய்துவந்ததாகவும் விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அம்மா என்ன பாரும்மா.. எழுந்துவாம்மா’!.. கதறி அழுத 4 வயது குழந்தை.. கிராமத்தை கண்ணீரில் உறைய வைத்த சோகம்..!
- ‘இந்த இடத்துல அடிக்கடி இப்டி நடக்குது’.. சென்னைக்கு வந்த ‘பூக்காரப் பெண்’.. நொடியில் நடந்த பயங்கரம்..!
- ‘மூக்கனூர் எப்டி போகணும்?’.. வழி கேட்ட மர்மநபர்கள்.. ‘ஸ்கூட்டி’ ஓட்டி பழகிய பெண்ணுக்கு நடந்த கொடுமை..! சேலம் அருகே அதிர்ச்சி..!
- ‘ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பெற்ற இளம்பெண்’.. டாக்டர் கொடுத்த ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
- ‘ஆதார்ல இப்படியா முகம் இருக்கும்?’.. ‘சந்தேகமா இருக்கே?’.. உயர் ரக ஹோட்டலில் தங்கியிருந்த பெண் செய்த அதிரவைத்த காரியம்!
- ‘யாரா இருந்தாலும் அவர நல்லா பாத்துக்கணும்!’.. ‘நெகிழவைத்த டிக்டாக் பெண்ணுக்கு’.. சமூக வலைதளங்களால் நேர்ந்த சோகம்!
- ‘பிரசவத்துக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி’.. ‘அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்’.. சாலையோரம் குழந்தை பெற்றெடுத்த அவலம்..!
- ‘நீச்சல்’ குளத்திலுள்ள ‘தண்ணீர்’ மூலமாகவே... பெண்கள் ‘கர்ப்பமாக’ முடியும்... ‘அதிகாரியின்’ பேச்சால் ‘பரபரப்பு’...
- ‘திருமணமான’ 12 நாட்களில் ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘புதுப்பெண்’... ‘உறைந்துபோய்’ நின்ற கணவர்... சென்னையில் நடந்த ‘சோகம்’...
- கண்களுக்கு 'டை'!... விபரீத ஆசையால்... இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!