'நடுவானில் பிறந்து'... 'பூமிக்கு வந்த க்யூட் பேபி!'... 'விமான நிலையத்தில் பரபரப்பு'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகத்தாரில் இருந்து தாய்லாந்து நோக்கிப் பறந்து கொண்டிருந்த விமானத்தில், பெண் ஒருவருக்கு இந்திய வான்பரப்பில் பிரசவம் நடந்துள்ளது.
கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று தாய்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.
இந்திய வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக, விமானி அவசர உதவியை தொடர்புகொண்டுள்ளார். விமானியின் அழைப்பையேற்று கொல்கத்தா விமான நிலையத்தில் விமானம் அதிகாலையில் தரையிறக்கப்பட்டது.
தாயும், சேயும் சிகிச்கைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த செய்தியை, கத்தார் விமான நிறுவனம் மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் தெரிவித்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய கொல்கத்தா விமான நிலைய அதிகாரி,"செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மருத்துவ உதவிக்காக விமானம் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது. 3.10 மணிக்கு விமானம் தரையிறங்கியது. விமான நிலையத்தில் இருந்த மருத்துவ அதிகாரிகள் விமானத்துக்கு உடனடியாக விரைந்தனர். ஆனால், நடுவானில் அந்தப்பெண்ணுக்கு குழந்தை பிறந்திருந்தது. இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குடிவரவு அனுமதிக்குப் பின்னர் 4.25 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து 5.50 மணிக்கு அந்த விமானம் மீண்டும் புறப்பட்டது" என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிச்சயமா இது கடவுளின் குழந்தை தான்'... மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட 'அதிசய நிகழ்வு'!
- 'பெற்ற தாயை கொலை செய்த மகள்!'... 'உயிருக்கு போராடும் தம்பி'... 'இளம்பெண்ணின் கொலை வெறிக்கு காரணம் என்ன?'... 'பதபதைக்க வைக்கும் உண்மை சம்பவம்'...
- பட்டப்பகலில் கல்லூரி டீச்சரை ‘பெட்ரோல்’ ஊற்றி கொழுத்திய நபர்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
- சீனாவில் இருந்து... தமிழகத்தின் 'இந்த' மாவட்டங்களுக்கும் 'கொரோனா' வைரஸ் பரவியதா ?... மருத்துவர்கள் விளக்கம்!
- இதெல்லாம் ‘ஸ்ட்ரிக்டா’ நோ... ‘கர்ப்ப’ காலத்தில் குழந்தையின் ‘மூளை’ வளர்ச்சியைப் பாதிக்கும்... ‘தாயின்’ பழக்கவழக்கங்கள்... ‘எச்சரிக்கும்’ மருத்துவர்...
- “பயப்படாதடா செல்லம்.. நான் இருக்கேன்!”.. “கிணற்றில் விழுந்து நாயை துணிந்து மீட்ட சிங்கப்பெண்”.. வீடியோ!
- கொலை செய்தும் ‘தீராத’ ஆத்திரத்தில்... ‘இளைஞர்’ செய்த காரியம்... ‘கையில்’ இருந்ததைப் பார்த்து... ‘உறைந்து’ நின்ற ஊர்மக்கள்...
- ‘அடுத்தடுத்து’ நடந்த சோகம்... தொடர்ந்து ‘கட்டாயப்படுத்திய’ பெற்றோர்... ‘சென்னையில்’ பெண் எடுத்த ‘விபரீத’ முடிவு...
- “பெட் ஷீட், தண்ணி எதுவும் கெடையாது!” .. “கொரோனா வைரஸ் எதிரொலி.. விமானம் எடுத்த அதிரடி ஆக்ஷன்”!
- ‘இரவு ஹோட்டலில் சாப்பிட விரும்பிய மனைவி’.. ஒரு காரணத்தை சொல்லி மறுத்த கணவன்.. காலையில் நடந்த சோகம்..!