போனை திருடிட்டு ஓடிய திருடன்.. "மூணே மணி நேரத்துல".. திருடன் இடத்த கண்டுபிடிச்ச இளம்பெண்.. அடுத்தடுத்து பரபரப்பு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது செல் போனை நபர் ஒருவர் திருடிச் சென்ற நிலையில், அதன் பின் இளம் பெண் ஒருவர் செய்த விஷயம், இணையத்தில் பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

Advertising
>
Advertising

ஹரியானா மாநிலம், குருக்ராம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

அந்த இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பாக, சந்தைக்கு சென்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

அப்போது, கடை ஒன்றில் அந்த பெண் பணம் செலுத்த முயன்றதாக கூறப்படும் நிலையில், அருகே நின்ற நபர் ஒருவர் சட்டென அவரின் கையில் இருந்த செல் போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால், உடனடியாக அந்த பெண்ணும் கத்தி கூச்சல் போட்டதாக தெரிகிறது. ஆனால், அதற்குள் அந்த திருடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

ஆனால், அதே வேளையில் தன்னிடம் இருந்த ஸ்மார்ட் வாட்ச், திருடிய போனுடன் இணைக்கப்பட்டிருந்ததால் அதன் மூலம் போனை கொண்டு சென்ற திருடனின் இருப்பிடத்தையும் அந்த பெண் கண்காணிக்க முயன்றுள்ளார். சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பின்னர், அந்த திருடன் இருந்த இடத்தையும் அந்த பெண் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இரு சக்கர வாகனம் ஒன்றில் அந்த திருடன் அமர்ந்திருக்க, பின்னால் சென்ற இளம்பெண், வேகமாக பின்னால் தாக்கியதாக கூறப்படுகிறது. எதிர்பாராத இந்த தாக்குதலால், நிலை குலைந்த திருடன், போனை கீழே போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது.

செல்போனை எடுத்துக் கொண்ட பெண், இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், இளம்பெண்ணின் மொபைல் போனை பயன்படுத்தி அந்த நபர் சுமார் 50,000 ரூபாய் வரை பெண்ணின் வங்கியில் இருந்து வேறு கணக்கிற்கு பரிமாற்றம் செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இது குறித்தும் அந்த பெண் போலீசாரிடம் குறிப்பிட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொபைல் போனுடன் திருடன் ஓடிய போதும், ஸ்மார்ட் வாட்ச் மூலம் மீண்டும் தனது மொபைல் போனை இளம்பெண் பெற்ற சம்பவம், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

WOMAN, SMARTWATCH, THIEF, MOBILE PHONE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்