‘மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயல்’.. கோபத்தில் மாலையை உதறி கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமண நாளன்று கல்யாணம் வேண்டாமென்று மணப்பெண் மணமேடையில் இருந்து எழுந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியில் ராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் தடபுடலாக நடைபெற்றது. அடுத்த நாள் காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு தயாராகி மணமேடையில் நின்றனர்.

அப்போது மணமகனின் தங்கை உற்சாகமாக படல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார். இதைப் பார்த்து கோபமான மணமகன் அருகில் இருந்த நாற்காலியை எடுத்து தங்கையை தாக்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண், இவரை திருமணம் செய்துகொள்ள முடியாது எனக் கூறி மணமேடையிலேயே மாலையை உதறிவிட்டு எழுந்து சென்றுள்ளார்.

இதனை அடுத்து உறவினர்கள் மணப்பெண்ணை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது, ஒரு கோபக்காரருடன் தன்னால் வாழ முடியாது. சகோதரியையே இப்படி அடிப்பவர் நாளை தன்னிடமும் இதேபோல்தான் நடந்துகொள்வார். பெண்களை மதிக்காத இதுபோன்ற நபரால் தன்னால் வாழ முடியாது என தெரிவித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின்போது மணமகன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

UTTARPRADESH, WOMAN, WEDDING, GROOM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்