'ஹலோ.. யாருகிட்ட?'.. 'தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கங்க'.. தூள் தூளாய் பறந்த அதிகாரிகளின் கேமரா!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தனது காரில் சோதனை நடத்தியதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் கேமராவை உடைத்து பரபரப்பை ஏற்படுத்திய கனடா மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.

வரும் 21-ஆம் தேதி மராட்டியத்தில் சட்டமன்றத் தேர்தல் நிகழவிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு இலவசங்கள், பணம் முதலியனவை விநியோகம் செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தடுக்கும் நோக்கில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மும்பை தேரி, வீர்தேசாய் சாலையில், அதிகாலை 2 மணி அளவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு பெண்ணின் காரை நிறுத்திய தேர்தல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அப்பெண்ணின் காரை சோதனை செய்துள்ளனர். அப்போது தேர்தல் அதிகாரிகளிடம்,  பேசிய அந்த பெண் தனக்கும் மராட்டிய தேர்தலுக்கும் சம்மந்தமில்லை, தனது காரை ஏன் சோதனை செய்ய வேண்டுன் என்கிற ஆத்திரத்தில், அதிகாரிகளிடம் இருந்த கேமராவை ஒரேடியாக உடைத்துள்ளார்.

அதன் பின் அப்பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதில், அவர் கனடாவைச் சேர்ந்த 33 வயது மாடல் அழகி ஷீனா லகானி என்பது தெரியவந்தது. மேலும் அப்பெண் வாகன சோதனையின் போது மது அருந்தவில்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் ஊர்ஜிதமாகியதாகவும், ஆனால் அவர் போதை மருந்து உட்கொண்டிருந்திருக்கலாம் என்றும் அம்போலி போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ELECTIONS, ELECTIONCOMMISSION, BIZARRE, WOMAN, CAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்