சுற்றுலா போன காதலனுக்காக தேர்வு எழுத போன பெண்.. உண்மை தெரிய வந்ததும் நேர்ந்த பரிதாபம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதனது காதலருக்காக இளம் பெண் ஒருவர் உதவி செய்ய போய், அதன் பின்னர் நடந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் உள்ள வீர் நர்மத் சவுத் குஜராத் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் பிகாம் மூன்றாம் ஆண்டுக்கான தேர்வு நடைபெற்றதாக தகவல்கள் தெரிகின்றது. அப்படி ஒரு சூழலில் தேர்வு நடந்த போது அங்கே குழு ஒன்று பரிசோதனை மேற்கொண்டுள்ளது. அப்போது குற்றம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது இதன் விசாரணை நிறைவடைந்துள்ளது.
இது குறித்து வெளியான தகவலின் படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிகாம் தேர்வு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளது. அந்த சமயத்தில் அங்கே பரிசோதனை குழு ஒன்று சோதனை மேற்கொண்ட போது கடும் பரபரப்பு தகவல் ஒன்று தெரிய வந்துள்ளது. இளம்பெண் ஒருவர் தேர்வு எழுதிக் கொண்டிருக்க அவர் மீது சந்தேகத்தில் விசாரித்த போது அந்த பெண் தனது காதலனுக்காக தேர்வு எழுத வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக ஆசிரியர் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக கம்ப்யூட்டர் உதவியுடன் ஹால் டிக்கெட்டில் சில மாற்றங்களை செய்து பிரின்ட் எடுத்து தேர்வு அறைக்குள் நுழைந்ததையும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தேர்வில் பார்வையாளர் தினந்தோறும் மாறிக் கொண்டிருப்பதால் மாணவர்களை அடையாளம் கண்டு கொள்வது சிரமமாக இருந்த சூழலில், ஹால் டிக்கெட் தினமும் பரிசோதிக்கப்பட்டு வரும். அப்போது அந்த இருக்கையில் வேறு ஒரு மாணவன் அமர்ந்து இருந்ததாகவும் இன்று அந்த இடத்தில் பெண் ஒருவர் இருப்பதையும் அருகே இருந்த மாணவி கூறியதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
அந்த பெண் பிடிபட்ட பிறகு அந்த சம்பந்தப்பட்ட மாணவனும் அவருடைய காதலனும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவர் உத்தரகாண்டிற்கு சுற்றுலா சென்று இருந்ததாகவும், அதனால் தேர்வு எழுத முடியாமல் போன ஒரு சூழலில் அவரது காதலியை பிகாம் தேர்வு எழுத திட்டம் போட்டு அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
அதே போல அந்த மாணவன் தொடர்ந்து தேர்வில் தோல்வி அடைந்து வந்ததால் அவருக்கு பதிலாக அவருடைய காதலி தேர்வு எழுத முடிவு செய்துள்ள நிலையில், தேர்வுக்கு எழுத வந்த இடத்தில் அவர் சிக்கி உள்ளார்.
இத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் அந்த பெண்ணின் பிகாம் பட்டப்படிப்பை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அரசாங்க வேலை கூட அவர் இழக்க நேரிடும் என்றும் சொல்லப்படுகிறது.
Also Read | பனிக்குள் தெரிந்த முகம்.. அலறிய பொதுமக்கள்.. தனது பிறந்தநாளை கொண்டாட சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஷ்ரத்தா கொலைக்கு பிறகு Break Up செய்தோம்".. பிரபல சீரியல் நடிகை உயிரிழப்பு.. முன்னாள் காதலன் சொன்ன திடுக்கிடும் தகவல்!!
- தந்தை கண் முன் இளம்பெண் கடத்தல்.. மாலையில் திருமண கோலத்தில் வீடியோ?!.. அதிர்ச்சி பின்னணி!!
- "நான் ஒரு தாய் தான், ஆனா அதே நேரத்துல".. குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வந்த பெண் MLA!!
- "கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்".. அதுக்கு அவங்க சொன்ன காரணம் தான்.. வைரல் பின்னணி..!
- நள்ளிரவில்.. வாசலில் தோன்றிய இளம்பெண் உருவம்.. வீடியோவை வாலிபர் பகிர்ந்ததும்.. போனில் பெண் சொன்ன விஷயம்.. கேட்டதும் அள்ளு விட்டுருச்சு!!
- போலீஸ் தேர்வுக்கு வந்த பெண்.. தலைக்குள் ரகசிய அறையா?.. போலீசையே அதிர வைத்த சம்பவம்!!..
- "அன்பு தான் எல்லாமே".. உணவு டெலிவரி ஊழியருடன் பைக்கில் இருந்த பெண்.. இணையவாசிகளை மனம் உருக வைத்த வீடியோ!!
- கர்ப்பமா இருந்தது தெரியாமலேயே விமான பயணம்.. நடுவானில் வந்த பிரசவ வலி.. பதறிப்போன பணியாளர்கள்..!
- நீண்ட நேரம் அசைவின்றி டேபிளின் மீது தலைவைத்து படுத்திருந்த பெண்??.. கதவை உடைத்து உள்ளே போன போலீஸ்க்கு காத்திருந்த ட்விஸ்ட்..
- உக்ரைனில் இருந்து காதலன் அனுப்பிய புகைப்படம்.. கொஞ்ச நாளில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!