UPI மூலம் பணம் செலுத்துபவரா.. இதையும் கொஞ்சம் தெரிஞ்சுகோங்க.. இல்லைனா பணம் காலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வங்கி  (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) வாடிக்கயைாளர்களுக்கு எச்சரிக்கை அலர்ட் விடுத்துள்ளது.

Advertising
>
Advertising

உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால்,  ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் கிரைம் பற்றிய வழக்குகளும் தொடர்ந்து அதிகரித்துள்ளன. இந்த வரிசையில், சில வருடங்களாக மொபைலின் க்யூஆர் குறியீடு மூலம் செய்யப்படும் மோசடி பற்றிய வழக்குகளும் வெளி வர தொடங்கியுள்ளது.  அதிகரித்து வரும் QR குறியீடு மோசடி வழக்குகளைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா) அதன் 44 கோடி வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.

QR குறியூடு மூலம் மோசடி

வாடிக்கையாளர்கள் யாரிடமிருந்தாவது QR குறியீட்டைப் பெற்றால், தவறுதலாகக் கூட அதை ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று வங்கி கூறியுள்ளது. இப்படிச் செய்தால், வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய மோசடிகளுக்கு ஆளாகக்கூடும்.  உங்களது கணக்கில் இருக்கும் தொகை முழுவதையும் இழக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம்.  எஸ்பிஐ தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை சமூகவலைதளத்தில் எச்சரித்துள்ளது.

SBI வெளியிட்ட எச்சரிக்கை

அதாவது,  "பணத்தைப் பெற QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு முறையும் நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தும் போது பாதுகாப்பு குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளது.  QR குறியீடு பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, பணம் பெறுவதற்கு அல்ல, என்று எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பணம் பெறுதல் என்ற பெயரில் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய மெசேஜ் அல்லது மெயில் வந்தால், தவறுதலாக கூட அதை வாடிக்கையாளர்கள் ஸ்கேன் செய்ய வேண்டாம். இது உங்கள் கணக்கை காலி செய்து விடக்கூடும்.

பணம் போனால் கிடைக்காது

அவ்வாறு QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் எப்போதும் பணம் கிடைக்காது என்று வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. , வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக செய்தி வருகிறது. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய சில பாதுகாப்பு குறிப்புகளை எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது. ஒரு சிறு தவறு நேர்ந்தால் கூட நீங்கள் உழைத்து சம்பாரித்த பணம் சில நொடிகளில் இழக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது.

QR குறியீட்டை தெரிந்து கொள்க:

  1. UPI மூலம் பணம் செலுத்தும் போது சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும்.
  2. பணம் செலுத்தும் முன் UPI ஐடியைச் சரிபார்க்கவும்.
  3. UPI பின்னை தவறுதலாகக் கூட மாற்றி உள்ளிட வேண்டாம்.
  4. பணம் செலுத்துதலில் வரும் பிரச்சனைகள் மற்றும் தொழில்நுட்பச் சிக்கல்களுக்கு பயன்பாட்டின் உதவிப் பிரிவைப் பயன்படுத்தவும்.
  5. UPI பின் பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே தேவைப்படும், பணம் பெறுவதற்கு அல்ல.
  6. UPI பின்னை யாருடனும் பகிர வேண்டாம்.
  7. பணம் அனுப்பும் முன் மொபைல் எண், பெயர் மற்றும் UPI ஐடி ஆகியவற்றை எப்போதும் சரிபார்க்கவும்.
  8. எந்த சூழ்நிலையிலும், உத்தியோகபூர்வ ஆதாரங்களைத் தவிர வேறு வழிகளில் தீர்வுகளை நாட வேண்டாம்.
  9. நிதி பரிமாற்றத்திற்கு ஸ்கேனரை சரியாகப் பயன்படுத்தவும்.
  10. ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால்,  https://crcf.sbi.co.in/ccf/ மூலம் தெரிந்து கொள்ளலாம்.

QR CODE, SBI BANK, ATM, MONEY SERVICE, SBI DIGITAL, TWITTER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்