'மகள்களுடன் தற்கொலை செய்ய அனுமதியுங்கள்'... 'பிரதமருக்கு கடிதம் எழுதிய தந்தை'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில், 3 மகள்களுடன் தற்கொலை செய்ய அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா முழுவதும் மழையின்றி மக்கள் தண்ணீருக்கு பெரிதும் தவித்து வருகிறார்கள். இந்நிலையில், உத்திரப்பிரசேதம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம், ஹசாயன் பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரபால் சிங், அப்பகுதியில் உள்ள போர்வெல் கிணறுகளில் உள்ள தண்ணீர், குடிக்க முடியாத அளவு உவர்ப்பாக உள்ளதாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து சந்தரபால் சிங் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 'இங்கு குடிப்பதற்கு ஒருசொட்டு குடிநீர் கூட இல்லை. என் மகள்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. போர்வெல் கிணற்று நீர் மிகவும் உவர்ப்பாக உள்ளது. தண்ணீரை குடிக்க முடியவில்லை. எனவே என்னுடைய மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சந்திரபால் சிங் பேசுகையில், 'எங்கள் பகுதியில் உள்ள போர்வெல்லில் இருந்து எடுக்கும் நீரை குடிக்க முடியவில்லை. நீரில் உப்பு அதிகமாக இருப்பதால் விளைவிக்கப்பட்டிருந்த பயிர்களும் கருகிவிட்டன. தீர்வுகாண அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் . எனவேபயனில்லைதான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி விட்டேன்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆபீசுக்கு வராதீங்க, வீட்ல இருந்தே வேலை பாருங்க'... 'ஐ.டி. நிறுவனங்களின் அதிரடி'!
- 'கோச்சிங் சென்டரில் தீ விபத்து'... 'மாணவர்களை காப்பாற்றிய இளைஞர்'... 'வைரல் வீடியோ'!
- ‘மிளிரும் கோப்பையுடன், 10 அணிகளின் கேப்டன்கள்’!வெல்லப்போவது யார்? வைரல் வீடியோ!
- ‘பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுடன் மோதபோவது யார்’?.. அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
- ‘உலகக் கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவரு தான்..!’ புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்..
- ‘அப்படியே சச்சின் ஆடுறத பாக்கற மாதிரியே இருக்கு..’ பிரபல வீரரைப் புகழ்ந்த பயிற்சியாளர்..?
- 'அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது’.. 'புரியலன்ற சோமாரிகளுக்கு'.. வைரலாகும் கமலின் புதிய ட்வீட்!
- ‘திருடிய குற்றத்துக்கு கை துண்டிப்பா..?’ இந்திய இளைஞருக்குப் பணியிடத்தில் கிடைத்த தண்டனை..!
- ‘உலகக்கோப்பையில் ஒரு மிகப் பெரிய டாஸ்க்’.. தயார் செய்த இங்கிலாந்து..! தகர்க்குமா இந்தியா?
- அபி நந்தனை 40 மணி நேரம் சித்ரவதை செய்ததா பாகிஸ்தான் உளவு அமைப்பு..?