‘18 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு...’ ‘ஹ்ம்ம்.... பாட்டில் பல்க்கா வாங்கணும் போலையே...’ ‘இங்க இல்லன்னா வேற ஸ்டேட் போறோம்...’ குடிமகன்களுக்கு வந்த பெரும் சோதனை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ளாட்சி சேர்தலுக்காக 18 நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட செய்தி சில குடிமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இந்த மாதம் வட்டம் , மாவட்டம் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கான சில முன்னேற்பாடுகளை ஆளும் கட்சி எடுத்துள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள இந்த சூழலில் கர்னூலில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அனில்குமார் செய்தியாளர் சந்திப்பில் நேற்று சில முக்கிய நடைவடிகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
உள்ளாட்சித் தேர்தல் இம்முறை வெளிப்படையாகவும், எந்தவித முறைகேடுகளும் இல்லாமலும் நடக்கும் எனவும், மேலும் தேர்தலின் போது மது குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக 12ம் தேதி முதல் 29ம் தேதி வரை 18 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்று உள்ளனர், ஒரு சில குடிமகன்களுக்கு இந்த செய்தி பெரும் அதிச்சியையும் அளித்துள்ளது. இதான் காரணமாக ஆந்திர மாநில எல்லையோரங்களில் உள்ள தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு சென்று மதுவை வாங்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் இப்போதே மது பாட்டில்களை வாங்கி பதுக்க தொடங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்