Wimbledon : 'ஆல் ஒயிட்' உடைக்கு இனி இல்லை தடா..! இனி அடர்நிற அண்டர் ஷார்ட்ஸை வீராங்கனைகள் அணியலாம்.! விம்பிள்டன் அதிரடி.
முகப்பு > செய்திகள் > இந்தியாலண்டன்: டென்னிஸ் வீராங்கனைகளுக்கு இருந்த அண்டர் ஷார்ட்ஸ் ஆடை நிற கட்டுப்பாடுகளை தளர்த்தி, இனி பல்வேறு வண்ணங்களிலும் அணியலாம் என விம்பிள்டன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Also Read | "சாரா கூட டேட்டிங்கா?".. முதல் முறையா கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சொன்ன பதில்.. வைரல் பின்னணி!!
1877-ம் ஆண்டு முதல் தொடங்கி நடைபெற்று வரும் உலகின் பழமையான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் உலக அளவில் மிக பிரபலம். தொடக்கத்தில் ஆண்களுக்கான பிரிவில் நடந்த இந்த போட்டிகள் 1884 முதல் பெண்கள் பிரிவிலும் நடத்தப்பட தொடங்கின. புல்தரையில் நடக்கும் ஒரே கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான இந்த போட்டிகளில், மைதானத்தில் 8 மில்லிமீட்டர் உயரத்துக்கு புற்கள் இருக்கும்.
இதில் வீராங்கனைகள் ஆடைகளுக்கு கட்டுப்பாடு இருந்துவந்தது. அதாவது மற்ற டென்னிஸ் போட்டிகளில் வீரர்களும் வீராங்கனைகளும் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் ஆடைகள் அணியலாம் என்கிற முறைமை உள்ளது. ஆனால் விம்பிள்டன் போட்டிகளில் மட்டும் வெள்ளை நிறத்தில்தான் ஆடை அணிய வேண்டும் என்கிற ரூல்ஸ் இருந்து வந்தது. ஆனால் இந்த விதிகளால் மாதவிடாய் காலத்தில் விளையாடும் வீராங்கணைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக நீண்ட வருடங்களாகவே கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில்தான், விம்பிள்டன் போட்டியை நடத்தி வரும் ஆல் இங்கிலாந்து கிளப் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தி, வீராங்கனைகள் இனி, அடர் நிற அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம் என்றும், அவர்களுக்கு இதுவரை இருந்த ஆல் ஒயிட் ஆடைக் கட்டுப்பாடு விலக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மான்செஸ்டர் சிட்டி கால்பந்து மகளிர் அணி இதே மாதிரி ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தி, மகளிர் அணியினர் இனி வெள்ளை நிற அண்டர் ஷார்ட்ஸ் அணிய வேண்டியதில்லை என தெரிவித்தனர்.
இந்நிலையில்தான் விம்பிள்டன் இவ்வாறு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து, விம்பிள்டன் தலைமை செயல் அதிகாரி சாலி போல்டன் பேசும்போது, "வீராங்கனைகள் களத்தில் தங்களுடைய ஆட்டத் திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்துவதற்கு அவர்களின் தேவை என்னவோ அதை செய்யவே நாங்கள் தயாராக இருக்கிறோம். அவர்களின் ஒருமித்த இந்த குரல்களுக்கு ரெஸ்பாண்ட் பண்ணுகிறோம்.
அதன்படி வீரர்கள், விம்பிள்டன் போட்டி பங்குதாரர்கள், நிர்வாகக் குழு என அனைவரும் இந்த ஆடை விசயத்தில் ஒருமித்த கருத்தை அடைந்ததை அடுத்து இந்த ஆடை கட்டுப்பாட்டை தளர்த்தியிருக்கிறோம். இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, வரும் ஆண்டு முதல் விம்பிள்டன் போட்டியில் விளையாட கூடிய வீராங்கனைகள், அவர்கள் விருப்ப பட்டால், வெள்ளை நிற அண்டர் ஷார்ட்ஸ் தவிர்த்து பல வண்ணங்களிலும் அண்டர்ஷார்ட்ஸ் அணிந்து ஆடலாம். இந்த விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது, வீராங்கனைகள் தங்களது ஆட்டத்தில் கூடுதல் கவனத்தை செலுத்தி திறமையை வெளிப்படுத்துவதற்கு உதவும் என நம்புகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கேரளா, டெல்லி".. 2 கொலைகள்.. இரண்டுக்கும் நடுவே இருந்த ஒற்றுமைகள்??... பீதியை ஏற்படுத்தும் பின்னணி!!
- "இதைவிட என்ன வேணும்".. மாவட்ட கலெக்டரை மனதார வாழ்த்திய பாட்டி.. வைரலாகும் கலெக்டரின் ட்வீட்..!
- மனைவி கொடுத்த ஹார்லிக்ஸ்.. கொரியரில் வந்த விஷம்.. கேரளாவில் அடுத்த அதிர்ச்சி!!
- "நைட் 9 மணிவரை போன் பண்ண கூடாது.!" மணப்பெண்ணிடம் இப்படி ஒரு அக்ரீமெண்ட் எழுதி வாங்கிய மாப்பிள்ளையின் நண்பர்கள்..!
- 10 முயற்சியும் தோல்வி.!. 11வது முறை விஷம் கொடுத்து காதலனை கொன்றாரா..? இளம்பெண் வழக்கில் பகீர்!!
- "முடி கொட்டுறது நிக்கவே இல்ல".. Treatment எடுத்தும் சரி ஆகாத விரக்தியில் இருந்த இளைஞர்.. துயர சம்பவம்!!
- கோவை TO கேரளா.. சைக்கிள்ல போய் தாலி கட்டிய மாப்பிள்ளை.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு அசந்துபோன உறவினர்கள்..!
- "அட, இது காணாம போன நம்ம பைக் ஆச்சே".. ஓனரை ஓவர்டேக் பண்ணி பெட்ரோல் போட்ட திருடர்கள்.. சினிமாவை மிஞ்சிய தரமான சம்பவம்.. 😅
- காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. இணையத்தில் காதலி Search செய்த விஷயம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
- காதலனுக்கு கஷாயத்தில் விஷம்.. கேரளாவையே நடுங்க வச்ச இளம்பெண்.. பகீர் சம்பவத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!