'பத்ம விபூஷண் விருதை திருப்பிக் கொடுத்த முன்னாள் முதல்வர்!'.. 'கேல் ரத்னா விருதை திருப்பித் தருவதாக எச்சரிக்கும் பிரபல வீரர்!' - தடதடக்கும் இந்திய விவசாயிகள் போராட்ட எதிரொலி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் தனக்கு வழங்கப்பட்ட கேல் ரத்னா விருதை திருப்பி அளிப்பதாக குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தெரிவித்தார்.

இதுகுறித்து விவசாயிகள் மத்தியில் பேசிய அவர், “விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது  ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதாகும். ஆனால் மத்திய அரசு விவசாயிகளை பாதிக்கும் கருப்பு வேளாண் சட்டங்களை திரும்ப பெறவில்லை என்றால் எனக்கு வழங்கப்பட்ட ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை திருப்பி ஒப்படைப்பேன்” என்றார்.

ஏற்கனவே விவசாயிகளுக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மத்திய அரசிடம் திருப்பி அளித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்