‘இந்த முறை நீதிமன்றத்திடம் அவங்க தந்திரம் எடுபடல!’.. ‘நாளை நிர்பயாவுக்கு நீதி கெடைச்சிடும்’. நிர்பயாவின் தாயார்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உள்ளதாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை தூக்கிலிடும் பணியில் ஈடுபடுவதற்கு மூன்று நாட்களில் தயாராக வேண்டும் என்று மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி டெல்லி திகார் சிறையில் நேற்று காலை அதற்கான ஒத்திகை நடத்தப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி பவன்குமார் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதேபோல் மற்றொரு குற்றவாளியான அக்ஷய்குமார் இரண்டாவது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இவர்களின் மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது. இதுபற்றி 2012 டெல்லி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நிர்பயாவின் தாயார் ஆஷாஅ தேவி இன்று காலை பேசியபோது குற்றவாளிகளுக்கு பல வாய்ப்புகளை நீதிமன்றம் வழங்கியது. இதைப் பயன்படுத்திக் கொண்ட குற்றவாளிகள் தங்களுடைய தூக்கு தண்டனையை தள்ளி போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே வந்தனர். இம்முறை இவர்களின் தந்திரத்தை நம்பாமல் நீதிமன்றம் விழிப்புடன் இருந்து உள்ளது. அதனால் நாளை நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்