‘ஒரே ஒரு வாக்குறுதிதான்.. மொத்த ஆம்பளைங்க வாக்குகளையும் அள்ளிடுவார் போல’.. அப்படி என்ன அது?
முகப்பு > செய்திகள் > இந்தியாபொதுவாகவே தேர்தலில் நிற்கும் கட்சிகள் மக்களின் நம்பிக்கையை பெற சில வாக்குறுதிகளை கொடுப்பதுண்டு.
பல கட்சிகளும் வாக்குறுதிகளை ஒரே மாதிரி சொல்வதுமுண்டு. தமிழகத்தைப் பொருத்தவரை எல்லா முதல்வர் வேட்பாளர்களின் அறிக்கையிலேயுமே ‘கச்சத் தீவை மீட்போம்’ என்கிற வாக்குறுதி மேண்டேட்ரியாகவே இருக்கும்.
அவ்வகையில் வாக்குறுதிகள் என்பவை, வேட்பாளர், தன்னை நம்பி ஒரு வாக்காளர் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதற்கான காரணியாக விளங்குகின்றன. அதனால்தான் ஒரு வேட்பாளர் தான் ஜெயிப்பதற்கு முன்னமே தன்னால் இதையெல்லாம் செய்ய முடியும், ஆனால் அதற்கான அரசதிகாரம் தனக்கில்லை என்பதால் தன்னை மக்கள் பிரதிநிதியாக வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்கிறார்கள்.
அவ்வகையில் குஜராத்தின், அகமதாபாத்தில் 'மனைவியால் துன்புறுத்தப்படுவோர் சங்கம்' என்கிற பெயரில் ஒரு 69 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட சங்கத்தை நடத்திவரும் தலைவர் தசரத் தேவ்தா இந்த மக்களவைத் தேர்தலில் அகமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்கென அவர் கொடுத்தது ஒரே ஒரு வாக்குறுதிதான்.
அதன்படி, மனைவி மற்றும் மனைவியின் உறவினர்களின் பாதிப்பினால் துன்பப்படும் கணவர்களை, அதில் இருந்து மீட்பதற்காக எம்.பி ஆகி, நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பாராம். இதற்கென, மனைவிகள் கணவரை துன்புறுத்தை தடுக்கும் வகையில் சட்டப்பிரிவு 498-இல் திருத்தம் கொண்டுவரவுள்ளதாகவும் கூறியுள்லார். முன்னதாக கடந்த 2014 மக்களவை தேர்தலிலும் இதே வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றவர் தேவ்தா என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி பேசிய தேவ்தா, ஆணும் பெண்ணும் சமம் என்பதால் திருமணமான கணவன்மார்களை அவரவர் மனைவியின் துன்புறுத்தலுக்கு எதிராக தாங்கள் குரல் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
OTHER NEWS SHOTS
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்படியும் பண்ணுவாங்க.. அதிகாரிகளே கவனம்’.. ரூபா ஐபிஎஸ் வெளியிட்ட வைரல் ‘சப்பாத்தி’ வீடியோ!
- அட போங்க வருமான வரித்துறை கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைங்க! துரைமுருகன் புது விளக்கம்!
- என்ன கண்ணகி பிறந்தது மதுரையிலா? புது சிலப்பதிகார கதையை உருவாக்கிய ஸ்டாலின்! பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்!
- தேர்தல் செலவுக்காக ஆதார் அட்டையை அடமானம் வைத்து வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்துள்ள வேட்பாளர்! விவரம் உள்ளே!
- 'ஆரத்தி எடுத்தால் தலைக்கு 50 ரூபாய்'... கிழிந்த ரூபாய் தாள்களால் ஏமாற்றம்... கட்சி நிர்வாகிகளை திட்டும் பெண்கள்!
- 'தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து'...'விவசாயத்திற்கு தனி பட்ஜெட்'...வெளியானது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!
- வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்! அமைச்சர்கிட்ட மக்கள் அப்படி என்ன கேள்வி கேட்டாங்க; பிரச்சாரத்தின் போது நடந்தது என்ன?
- அட இந்த டீலிங் நல்லா இருக்கே! தேர்தலில் ஓட்டு போட்டா கூடுதல் மதிப்பெண்கள்! ஆச்சரியப்பட வைக்கும் தகவல்!
- ‘வாக்களிப்பதை வலியுறுத்தி’ இந்த டாக்டர் செய்யும் வைரல் காரியம்.. அதுமட்டுமில்ல..!
- காதல் விவகாரத்தை தட்டிக் கேட்ட மனைவிக்கு கணவரின் காதலி கொடுத்த தண்டனை!