'கடைசி வரை' உடனிருப்பேன் என்று கூறிய 'கணவரின்...' 'முகத்தைக் கூட' நேரில் பார்க்க முடியாத 'சாவு'... 'இறுதிச்சடங்கு இப்படியா நடக்கணும்...' 'கண்ணீர்விட்டு' அழுத 'மனைவி'...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது கணவரின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்து மனைவி கண்ணீர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 60 வயதுடைய ஒரு நபருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த மே 11ம் தேதி, மாலையில் கணவரின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து சுவாசக்கோளாறு மற்றும் இதயப் பிரச்னையால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் மனைவி கொரோனா சிகிச்சையில் இருக்கிறார். மகள் குஜராத்திலும், உறவினர்கள் வாரணாசியிலும் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர்களால் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. இதனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பிலேயே உடலை தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த பின்னரும் கணவரின் முகத்தை காண முடியாமல் தவித்த மனைவி இறுதிச் சடங்கை வீடியோ கால் மூலம் பார்த்து கண்ணீர் விட்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எட்டு மாத கர்ப்பிணி மனைவி, கைக்குழந்தை’... ‘700 கிலோ மீட்டர் தூரத்தை’... ‘நெஞ்சை உருக்கும் சோகம்’
- 'நுரையீரலை' காயப்படுத்தி 'சேதப்படுத்துவது...' நமது 'நோய் எதிர்ப்பு' அணுக்கள் தான்... 'தந்திரமாக' செயல்படும் 'கொரோனா...' 'புதிய ஆய்வில் முழுமையான விளக்கம்...'
- 'இனி' அவ்வளவுதான் 'வாழ்க்கை' முடிந்தது என... நினைத்த 'புற்று நோயாளிகளைக்' கூட.... 'கொரோனாவிலிருந்து' மீட்ட 'சென்னை மருத்துவர்கள்...'
- 'அப்பா...! நம்ம ஊர்லயும் கொரோனா வந்துச்சுப்பா...' 'அழாத ரோஜா, நான் வெளிய போகமாட்டேன்...' கண்ணீர் வரவழைக்கும் அப்பா, மகள் கான்வர்சேஷன்...!
- தினமும் வரும் குட் நியூஸ்... கொரோனா இல்லாத மாநகராட்சி... சாதிக்கும் மாவட்டங்கள்!
- 'வக்கீல்களின் கருப்பு கோட்டிற்கு கொரோனாவால் வந்த ஆபத்து'... சுப்ரீம் கோர்ட் முக்கிய அறிவிப்பு!
- "நாடு முழுவதும் ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து!".. ''ஏற்கனவே முன்பதிவு செய்தோருக்கு.." - ரயில்வே அமைச்சகம் புதிய அறிவிப்பு!
- 'நாங்க எவ்வளவோ சொன்னோம்'... 'சென்னையில கொரோனா எகிற இவங்க தான் முக்கிய காரணம்'... முதல்வர் அதிரடி!
- "ஆசிரியருக்கு நிகர் ஆசிரியர்தான்!".. 'கொரோனா வார்டில்' சிகிச்சை பெறும் நிலையிலும் சோர்வடையாத 'அறப்பணி!'.. கண்கலங்க வைக்கும் நிகழ்வு!
- '127 நாடுகளுக்கு' மருந்து வழங்கப் போகும் 'இந்தியா'!.. 'கொரோனா' பலி 3 லட்சத்தை நெருங்கிய நிலையில் அமெரிக்க நிறுவனத்தின் 'அதிரடி முடிவு'!