"தாலி கட்டுன புருஷனாவே இருந்தாலும் வீட்டுக்குள்ள வரக்கூடாது..." 'தடை விதித்த மனைவி...' 'கொரோனா குணமடைந்தாலும்...' 'விடாமல் துரத்தும் பயம்...' 'கணவனுக்கு' நேர்ந்த 'பரிதாப நிலை...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருவனந்தபுரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்த கணவரை மனைவி வீட்டுக்குள் விட மறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், மிக நெருங்கிய சொந்தங்களே அருகில் நெருங்க அச்சப்படும் நிலையை உருவாக்கியுள்ளது. பொதுவாக உடல்நிலை பாதிக்கப்படும் போது உறவுகளுக்குள் நெருக்கமே அதிகரிக்கும். ஆனால் கொரோனா வைரஸ் உறவுகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி விடுவதை காண முடிகிறது. அதுபோன்ற ஒரு சம்பவமே கேரளாவில் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளித்த தீவிர சிகிச்சையின் காரணமாக கொரோனா பாதிப்பில் இருந்து அவர் மீண்டார்.

இதையடுத்து தனது மனைவி, குழந்தைகள்  மற்றும் சொந்தங்களைக் காண ஆவலுடன் வீட்டுக்குச் சென்றார். ஆனால் நீண்ட நாள் கழித்து தன் கணவரைப் பார்த்த மனைவியின் முகத்தில் எந்த வித சந்தோஷமும் இல்லை. மேலும் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க அவரது மனைவி மறுத்து விட்டார். என்னதான் கணவராக இருந்தாலும் அவரால் தனது குடும்பத்தினருக்கு இந்த ஆட்கொல்லி நோய் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அவரை வீட்டுக்குள் விட மறுத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் அந்த நபர் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளார்.

இந்த விவகாரம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து குறிப்பிட்ட அவர், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று வராது. இதுதொடர்பாக கணவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்த பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் வழங்கப்படும் எனக் கூறினார்.

CORONA, KERALA, TRIVANDRUM, HUSBAND, REFUSED WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்