‘அவர்’ இப்போ என்கூட தான் இருக்கார்...! ‘புல்வாமா தாக்குதலில் கணவர் மரணம் ...’ ‘கணவர் இறந்து ஓராண்டுக்குள்...’ ராணுவத்தில் சேரப்போகும் மனைவி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி உயிரிழந்த ஓராண்டுக்குள், அவருடைய காதல் மனைவியும் தாங்க முடியாத வேதனைகளை கடந்து தற்போது ராணுவ அதிகாரிக்கான பயிற்சியில் சேர உள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த மேஜர் விபூதி டவுண்டியால், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு, பிப்ரவரி மாதம் பதினேழாம் தேதி அன்று  ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகளுடன் நடந்த இருபது மணி நேர தொடர் சண்டையில் அவர் உயிரிழந்தார். அவருடன் மூன்று ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

அப்போது, 35 வயதான விபூதியின் உடல் டேராடூனுக்கு இறுதி மரியாதை செலுத்த கொண்டு வரப்பட்டது. திருமணமான ஒன்பது மாதங்களில் கணவரை இழந்த சோகம் இருந்தபோதும், 'சல்யூட்' அடித்து மரியாதை செலுத்தினார். மேலும் கணவரின் காதருகே சென்று, 'ஐ லவ் யூ' என அவருடைய இளம் காதல் மனைவி நிகிதா கவுல் கூறியபோது அதை பார்த்த உள்ளங்கள் அனைத்தும் கரைந்துப் போனது.

இது நடந்து, ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், கணவர் வழியில் நிகிதாவும் ராணுவத்தில் சேருகிறார். குறுகிய கால பணி திட்டத்தின் கீழ், ராணுவ அதிகாரியாவதற்கான எழுத்து தேர்வை எழுதினார். ராணுவ அதிகாரியின் விதவை என்ற அடிப்படையில், வயது வரம்பு அவருக்கு தளர்த்தப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்.

தற்போது சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் அகாடமியில், ஓராண்டு பயிற்சியில் சேர உள்ளார் நிகிதா. ராணுவத்தில் இருந்தபோது, என் கணவர் எந்த மனநிலையில் இருந்தார் என்பதை அறிந்து கொள்ள விரும்பியதாக தெரிவித்துள்ளார். அதற்காக கடந்த ஓராண்டில் என் மனதின் வேதனைகளை கடந்து, ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு தீவிர பயிற்சி மேற்கொண்டேன். ''இப்போது என் கணவர் உடன் இருப்பதாக நான் உணர்கிறேன். அதுதான் எனக்கு மனதிடத்தை அளிக்கிறது,'' என நிகிதா கூறியுள்ளார்.

INDIANARMY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்