'கணவன் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுக்காததால், தன் உடலில்...' புள்ளைங்க படிப்புக்கு கூட உதவ மாட்டீங்கல...! மனைவி செய்த அதிர்ச்சி காரியம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குழந்தைகளுக்கு பள்ளிகளில் ஆன்லைன் பாடம் படிக்க ஸ்மார்ட் போன் கேட்ட மனைவி, கணவன் மறுத்ததால் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்துள்ளனர். இந்நிலையில் பெரும்பாலான பள்ளிகளும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் வசிக்கும் தம்பதிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் ஆன்லைன் பாடம் நடத்தி வருகின்றனர். 29 வயதான ஜோதி மற்றும் அவரது அவரது கணவருக்கு இடையே ஸ்மார்ட் போன் வாங்கும் விஷயத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது.

குழந்தைகளின் பள்ளியில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதால், ஸ்மார்ட்போன் வாங்கி தருமாறு மனைவி கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்ததாகவும், ஊரடங்கு முடிந்த பிறகு வாங்கி தருவதாக கூறியதாகவும் கூறியுள்ளார்.

அதை ஏற்க மறுத்த ஜோதி கடும் மனஉளைச்சலில் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகளின் படிப்பிற்காக செல்போன் கேட்டு வாங்கித் தராத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்