“உன் நடத்தையில தான் சந்தேகமா இருக்கு!”... தூங்கிக் கொண்டிருந்த கணவர்.. மனைவி செய்த அதிர்ச்சி காரியம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கணவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட பெண் ஒருவர் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். 40 வயதான இவர், இவருடைய மனைவி பத்மா மற்றும் தனது 2 இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மாவுக்கும், கணவர் மஞ்சுநாத்துக்கும் இடையே தொடர்ச்சியான தகராறுகள் நடந்தபடி இருந்துள்ளன.

இந்த தகராறின் உச்சமாக கடந்த சனிக்கிழமை அன்று இருவருக்கும் உச்சபட்ச சண்டை நிகழ்ந்துள்ளது. இதனால் மறுநாள், அதாவது ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி அளவில் தனது கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கொதிக்கும் எண்ணெயை ஊற்றயுள்ளார் பத்மா.

உடனே எண்ணெயின் சூடு தாங்காமல் அலறித் துடித்துள்ளார் கணவர் மஞ்சுநாத். அதன் பிறகு தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனை அடுத்து காவல்துறையினர் பத்மாவை கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

HUSBANDANDWIFE, BANGALORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்