நான் 'இப்படி'லாம் பண்றது உங்களுக்கு தெரியுமா...? 'ரொம்ப அன்யோன்யமா வாழ்ந்த ஜோடி...' - கண்கலங்க வைக்கும் காதல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இறந்துப்போன கணவரின் நினைவாக மனைவி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் நிகழ்வு கண்கலங்க வைத்துள்ளது.

ஆந்திரபிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பத்மாவதி என்ற பெண்மணி செய்த செயல் உள்ளத்தை உருக வைத்துள்ளது. இறந்துப்போன தன் அன்புக் கணவருக்காக கோவில் கட்டி, சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் .

அங்கிரெட்டி - பத்மாவதி தம்பதியர் திருமணம் முடிந்து மிகவும் அன்யோன்யமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் விபத்தில் சிக்கி அங்கிரெட்டி உயிரிழந்துள்ளார்.

கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் பத்மாவதி தினமும் தவித்து வந்துள்ளார். ஆனால் தனது கணவர் தனது அருகிலேயே இருப்பதாக உணர்ந்த பத்மாவதி அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார். அதாவது அங்கிரெட்டி தனக்கு கோவில் கட்டும்படி சொன்னதால் இந்த கோவிலை கட்டியதாக பத்மாவதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த கோவிலில் தனது கணவரின் பளிங்கு உருவ சிலையும் அவர் நிறுவி உள்ளார். காதல் கணவரின் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார்.

கோவில் கட்டி வழிபாடு மட்டும் நடத்துவதோடு நின்றுவிடாமல் பௌர்ணமி தினத்தன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார். இறந்த பின்பும் கணவருக்காக மனைவி செய்யும் இந்த காரியங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்