"இது விபத்து இல்ல.. இதுக்கு பின்னாடி யாரோ இருக்காங்க".. சிசிடிவி கேமராவால் போலீசில் சிக்கிய மனைவி.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் மனைவி தனது காதலருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertising
>
Advertising

அகமதாபாத்தின் வஸ்ட்ராலில் உள்ள கேலக்ஸி கோரல் சொசைட்டியில் வசிப்பவர் ஷைலேஷ் பிரஜாபதி. 43 வயதான இவர் தினந்தோறும் காலை வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலை வழக்கம்போல ஷைலேஷ் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வேகமாக வந்த லாரி ஒன்று அவர்மீது மோதியதால் ஷைலேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். உடனடியாக விபத்தினை நேரில் பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.

சந்தேகம்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் ஷைலேஷின் உடலை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இதுகுறித்து விசாரணையில் இறங்கிய குற்றவியல் பிரிவு போலீசார், விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆராயும்போது தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

ஷைலேஷின் மீது மோதிய லாரி, மெதுவாக சென்று குறிப்பிட்ட தூரத்தை அடைந்த பின்னர் வேகமெடுத்து ஷைலேஷை மோதியதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனால், ஷைலேஷின் மனைவியிடம் விசாரணை நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

10 லட்சம்

ஷைலேஷின் மனைவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த பெண்மணியும் அவரது நண்பர் நிதின் என்பவரும் கடந்த சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இருவரும் சேர்ந்து யாசின் என்பவரிடம் 10 லட்ச ரூபாய் கொடுத்து, ஷைலேஷை கொலை செய்ய திட்டமிட்டதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், ஷைலேஷின் மனைவி மற்றும் நிதின் ஆகிய இருவரையும் கொலை குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், யாசின் மற்றும் அவரது கூட்டாளி ஒருவரை வலைவீசி தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

கணவனை கொலை செய்து, அதனை விபத்து போல ஜோடித்த மனைவி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டது, அஹமதாபாத் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

HUSBAND, WIFE, CCTV, POLICE, கணவன், மனைவி, சிசிடிவி, போலீஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்