'எம்.எல்.ஏ.வுக்கு போலீஸ் பாதுகாப்பு'... 'இப்படி ஒரு வறுமையா'?... அரிசி, பருப்பு என அனைத்தையும் வாங்கி கொண்டு வந்த வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நான்கு மத்திய படை வீரர்களுக்குத் தினசரி உணவு அல்லது அவர்களுக்குத் தங்குவதற்கான ஏற்பாடுகளை சட்டமன்ற உறுப்பினரால் செய்ய முடியவில்லை.

மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின்  பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர். சந்தான பவுரி.  சமீபத்தில் நடந்து முடிந்த  சட்டசபைத்  தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறையால் அங்குள்ள பா.ஜ.க  எம்.எல்.ஏக்கள் அனைவருக்கும்  மத்திய பாதுகாப்புப் படை வழங்கப்பட்டு உள்ளது . தனது கட்சியின் முடிவுக்கு  சட்டமன்ற உறுப்பினர்  சந்தனாவும் கட்டுப்பட்டு உள்ளார்.

பாதுகாப்புக்கு வீரர்கள் வந்த நிலையில், தினசரி கூலித்தொழிலாளியின் மனைவியான எம்.எல்.ஏ சந்தனா வீரர்கள் தங்குவதற்கு முறையான இடம் மற்றும் உணவை அவரால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. சட்டமன்ற உறுப்பினரின் கணவரும், அவரது இரண்டு குழந்தைகளும் பாழடைந்த ஒற்றை அறை குடிசையில்  தண்ணீர் வசதி - கழிப்பறை வசதி  கூட இல்லாமல் வசித்து வருகின்றனர். ஊரடங்கால் எம்.எல்.ஏவின் கணவருக்கும் வேலை இல்லை.

இதனால் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற மத்திய படை வீரர்கள் தங்கள் சொந்த பணத்தைப் போட்டு உள்ளூர் மளிகைக் கடையிலிருந்து  பொருட்கள் மற்றும் காய்கறிகளை  வாங்கி  எம்.எல்.ஏவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணவு  வழங்கி வருகின்றனர். என் கணவர் ஒரு கூலித்தொழிலாளி . எங்கள் தினசரி சராசரி வருமானம் ரூ .400 ஆகும். ஊரடங்கால் வருமானம் இல்லை என்று எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்