கோவாக்சின் தடுப்பூசி போட்டவங்களுக்கு ஒரு குட் நியூஸ்.. இத்தனை நாளா இருந்த அந்த ‘சிக்கல்’ நீங்க போகுது..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு நல்ல செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் (Bharat Biotech) என்ற நிறுவனம் தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் வழங்கவில்லை. அதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கோவாக்சினுக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் பாரத் பயோ டெக் நிறுவனம் விண்ணபித்தது. இதுகுறித்து முடிவெடுக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வாரம் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு பயணம் செய்வதில் உள்ள சிக்கல் நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைப்பதால், பல நாடுகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்