இந்தியாவோட 'இந்த' பகுதிகளுக்கு... 'லாக்டவுன்' ரொம்ப நாள் நீட்டிக்கணும் இல்லன்னா... 'எச்சரிக்கும்' உலக சுகாதார அமைப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியா முழுவதும் தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு மே மாதம் 17 - ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் எதிர்பார்த்ததை விட அதிக காலத்திற்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் மூலம் சுமார் 74 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,400 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கொரோனா வைரசுக்கான உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதியான டேவிட் நபரோ கூறுகையில், 'இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்துள்ளது மிகவும் தைரியமான முடிவு. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மும்பை, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் இன்னும் அதிக காலத்திற்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியிருக்கும். இல்லையென்றால் அதிக உயிரிழப்புகளை இந்தியா சந்திக்க வேண்டி வரும்' என எச்சரித்தார்.
மேலும், 'இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதில் 50 முதல் 70 சதவீதம் பேருக்கு கொரோனா அறிகுறியே இல்லை என அரசு தரப்பில் தகவல்கள் கூறுகின்றன. வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் நபருக்கு கொரோனா அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் அபாயமுள்ளது என நிபுணர்கள் நம்புகின்றனர்' என கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் 9 ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று எண்ணிக்கை!.. 60க்கும் மேற்பட்டோர் பலி!.. முழு விவரம் உள்ளே
- ‘ரொம்ப நேரமா பூட்டியிருந்த கதவு’.. சென்னை இன்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
- இந்த பகுதிகளில் எல்லாம் ‘தலைதூக்கும்’ பாதிப்பு... ‘சென்னையை மிரளவைக்கும் கொரோனா’... .இந்த ஏரியாக்கள் பக்கம் போயிடாதீங்க!
- சென்னை அருகே பரபரப்பு!.. கொரோனா சிகிச்சையில் இருந்து தப்ப முயன்ற நபர் உயிரிழப்பு!.. என்ன நடந்தது?
- தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் பலி!.. 9 ஆயிரத்தை நெருங்குகிறது பாதிப்பு எண்ணிக்கை!.. முழு விவரம் உள்ளே
- '700க்கும்' அதிகமான எண்ணிக்கையுடன் 'முதலிடம்'... 'எந்தெந்த' மண்டலங்களில் 'எத்தனை' பேருக்கு பாதிப்பு?... 'விவரங்கள்' உள்ளே...
- ‘10 வருஷத்துக்கு முன்னாடி வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’.. சென்னையை அதிரவைத்த ‘வாலிபர்’.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
- 'குடும்பத்தோடு தவிப்பு'... '21 ஆயிரம் கிமீ, 30 மணி நேர பயணம்'.... சென்னைக்கு பறந்த 'ஏர்ஆம்புலன்ஸ்'!
- ஹவுசிங் போர்டில் 23 பேருக்கு கொரோனா... கலக்கத்தில் சென்னை குடியிருப்புவாசிகள்...!
- சென்னையில் முதல்முறையாக 'கட்டுப்படுத்தப்பட்ட' பகுதியாக மாறியுள்ள 'ரயில்' நிலையம்... ஊரடங்கு தளர்வுக்கு பின்னும் 'இங்கு' ரயில்சேவை செயல்படாது...