பஞ்சாப் முதல்வரை தோக்கடிச்ச வேட்பாளர் யார்ன்னு உங்களுக்கு தெரியுமா?.. அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தேர்தலில் வீழ்த்திய வேட்பாளர் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (10.03.2022) நடைபெற்றது. இதில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது. தேர்தல் ஆணைய இணையதளத்தின் விவரங்களின் படி, இதுவரை அக்கட்சி 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

அதேவேளையில் ஆளும் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிரோன்மணி அகாலி தளம் 3 இடங்களிலும், பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அது பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் தோல்வி குறித்து விமர்சித்துள்ளார் அதில், ‘பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை தேர்தலில் வீழ்த்தியது யார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் நம் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வேட்பாளர் லப் சிங் உகோகே. இவர் செல்போன் பழுது நீக்கும் கடையில் வேலை செய்து வருபவர்’ என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

சரண்ஜித் சிங் சன்னியைவிட ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான லாப் சிங் உகோகே 37,558 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அந்த தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 51.07 சதவிகிதம் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு சென்றுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CHARANJITSINGH, ARVINDKEJRIWAL, AAP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்