'தாறுமாறா பரவிட்டு இருக்கனால...' கொரோனா வைரஸ் 'இந்த மாதிரி' ஆகுறதுக்கும் சான்ஸ் இருக்கு...! - உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி வெளியிட்ட தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் அதிகளவில் கொரோனா வைரஸ் பரவுவதால் கொரோனா உருமாறும் அபாயமும் இன்னும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியல் விஞ்ஞானி மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார்.
அதில், 'கொரோனா வைரஸ்களை உலக சுகாதார அமைப்பு பல வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் பி.1.617 வகை உருமாற்ற வைரஸ், அதிகமான தொற்றை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக தடுப்பூசி மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும், இயற்கையாகக் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட எதிர்க்கும் திறன் படைத்தவை.
ஆனால் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வருகிறது. இதனால் இன்னும் புதிய வகை வைரஸ்கள் உருமாற்றம் பெற்று, ஆபத்தானதாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.
அதோடு இவ்வகை வைரஸ் தன்னைப் பிரதி எடுக்கவும், அதிகமாகப் பரவவும், தொடர்புப்படுத்தவும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. அதாவது உருமாற்றம் அடையும் தன்மை கொண்டது. நாம் பயன்படுத்தி வரும் தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படக் கூடியவை.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றிக்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் மட்டும் காரணமல்ல. மக்கள் அதிகமான அளவில் கூடுவதும், கூட்டமாகச் சென்று கலப்பதும் முக்கியக் காரணம்.
இந்தியாவில் தற்போதைய நிலையை பார்த்தால், தடுப்பூசி செலுத்தும் வேகம் போதாது. இப்படியே சென்றால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க மாதங்கள் ஏன் ஆண்டுக்கணக்கில் கூட ஆகலாம்' எனக் சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளியில் தெரிய வருகிறதா சீனாவின் உண்மை முகம்'?... 'இதற்காக தான் உருவாக்கப்பட்டதா கொரோனா வைரஸ்?'... அதிரவைக்கும் பின்னணி!
- இனிமேல் என் 'வாழ்க்கை' முன்னாடி மாதிரி இருக்காது...! - பியூஸ் சாவ்லா குடும்பத்தில் நடந்த சோகம்...!
- ‘இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே டாக்டரை பாருங்க’!.. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை தாக்கும் புதிய பூஞ்சை.. ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!
- நீங்க 'அதுக்காக' தான் வெளிய வர்றீங்கன்னா... 'தயவுசெய்து இனிமேல் வராதீங்க...' 'அதுக்கு மாற்று ஏற்பாடு பண்ணியாச்சு...' - சட்டீஸ்கர் அரசின் 'அதிரடி' முடிவு...!
- இதோ 'இந்தியாவுக்கு' எங்க 'டீம்' கிளம்பிட்டாங்க...! அன்னைக்கு இந்தியா செஞ்ச 'உதவிய' நாங்க மறக்க மாட்டோம்...! - விரைந்தது இஸ்ரேல் நிபுணர்கள் குழு...!
- VIDEO: ‘குழந்தைகளுக்கு 3-4 நாளா காய்ச்சல்’!.. ‘அப்பாவுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சிட்டே இருந்துச்சு’.. அஸ்வின் அவசர அவசரமாக வீடு திரும்பியதற்கு பின்னால் இருக்கும் சோகக்கதை..!
- ‘இன்று முதல் அமலுக்கு வந்த முழு ஊரடங்கு’!.. காய்கறி, மளிகை கடை எத்தனை மணி வரை திறந்திருக்கும்..? எதற்கெல்லாம் அனுமதி கிடையாது..?
- ‘8 மாத கர்ப்பம்’!.. உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ‘நிறைமாத’ இளம் மருத்துவர்.. பரிதாபமாக பலியான சோகம்.. தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்..!
- ‘இனியும் வெயிட் பண்ணக்கூடாது’!.. ரிஸ்க் எடுத்த இரண்டு தன்னார்வலர்கள்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
- ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சி கோப்பை விளையாடிய வீரர் அதிர்ச்சி மரணம்!.. சோகத்தில் மூழ்கியது கிரிக்கெட் உலகம்!