'அவர் அப்படிப்பட்டவர் இல்ல.. ஜெயிச்சாலும்.. தோத்தாலும்'.. கம்பீருக்கு ஆதரவாக இறங்கிய பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 2014-ஆம் தேதி டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்த தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த சில தினங்களில் நடக்கவுள்ள நிலையில் டெல்லி கிழக்கு பகுதியில், பாஜகவில் அண்மையில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் போட்டியிடுகிறார்.

அதே தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் அதிஷி, கவுதம் கம்பீர் 2 வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்துவருவதோடு, தன்னை இழிவுபடுத்தும் வகையிலான மோசனாம வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்து பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீர் துண்டு சீட்டுகளை வெளியிட்டு வருவதாகவும் கூறி அவற்றை சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் காட்டினார்.

அந்த கூட்டத்திலேயே கதறி அழுத அதிஷிக்கு ஆதரவாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,  ‘நான் சிறிதும் கவுதம் கம்பீர் இவ்வாறு நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை, உங்கள் உணர்வை புரிந்துகொள்கிறேன் அதிஷி, இதனை வலுவானதொரு துணிச்சலுடன் எதிர்த்து போராடுங்கள் ’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி தற்போது பேசியுள்ள ஹர்பஜன், கவுதம் கம்பீரின் மீதான இந்த குற்றச்சாட்டுகள் தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், தனக்கு கம்பீரை நன்றாகத் தெரியும்; பெண்கள் பற்றி அவர் அவ்வாறு பேசுபவரும் அல்ல; அவர் தோற்கிறாரா அல்லது ஜெயிக்கிறாரா என்பதையெல்லாம் தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் கம்பீருக்கு ஆதரவாக ட்வீட் போட்டுள்ளார்.

BJP, HARBHAJANSINGH, GAUTAMGAMBHIR, AAP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்