திருப்பதி லட்டுக்கும் 304-க்கும் என்ன சம்மந்தம்? லட்டு சாப்டவங்க அவசியம் இதயும் தெரிஞ்சுக்கங்கப்பு.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎன்னதான் நெய், முந்திரி, ஏலக்காய் என எல்லாம் போட்டு செய்யும் லட்டுகள் எத்தனை இருந்தாலும், திருப்பதி லட்டின் மகிமை தெரிந்தவர்களுக்குத்தான் உண்மையிலேயே உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நாக்கில் எச்சில் ஊறும்.
வெங்கடாஜலபதி ஏழுமலையான் ஒருபுறம் இருக்கட்டும்; அப்படி என்னதான் இருக்கு அந்த லட்டுல? என்று தெரிந்து கொள்வதற்காகவே திருப்பதி சென்றவர்கள் எல்லாம் உண்டு. ஒரு கவளமேனும் அந்த லட்டை உள்ளங்கையில் வைத்து விழுங்கிச் சுவைக்காமல் மலையேறாதவர்கள் இருந்தால் ஆச்சர்யம்தான். அட, திருப்பதிக்கு போயிட்டு வந்தவர்களிடம் நாம கேக்குறது என்னவா இருக்கும்? என்றால், ‘ஏ.. திருப்பதி போயிட்டு வந்த.. லட்டு எங்கப்பா?’ என்று திருப்பதி போனதற்கு சான்றாக இருக்கும் ஒரே ஆவணப் பொருள், லட்டுப் பிரசாதம்தான். ஸ்ரீவாரி லட்டு என்றழைக்கப்படும் இந்த லட்டினை லட்டு பொட்டு என்கிற இடத்தில் வைத்துதான் தயாரிக்கிறார்கள்.
இந்த லட்டுக்கும் 304க்கும் என்ன சம்மந்தம்?.. இருக்குங்க.. ஆம், ஆகஸ்ட் 02-ஆன இன்றுதான் முதன்முதலில் சீனிவாசப் பெருமாளுக்கு லட்டு பிரசாத படையல் வைத்த நாள்; இன்றுடன் 304 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆகஸ்ட் 02, கி.பி.1715-ஆம் ஆண்டுதான் இந்த லட்டினை முதன் முதலில் செய்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்ததாக வரலாறு சொல்கிறது. 2016-ஆம் ஆண்டில் மட்டும் 10 கோடியே 34 லட்சம் லட்டுகள் செய்து விற்கப்பட்டுள்ளன. வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், ‘ஒத்த லட்டுக்கு, கொட்டோ கொட்டென்று கொட்டுது துட்டு’ என்று. இந்த வசனம் அத்தனை உண்மையானது. 270 சமையல்காரர்கள் உட்பட சுமார் 600 பேர் இந்த லட்டை தயாரிக்கின்றனர். என்னதான் 304 ஆண்டுகளாய் மாறாத மணம், சுவை, அளவு (லட்டு சைஸ்) இந்த லட்டுக்கு இருந்தாலும், 2009-ஆம் ஆண்டுதான் திருமலை திருப்பதி தேவஸ்தானம், 175 கிராம் கொண்ட இந்த ‘பெரிய திருப்பதி லட்டுக்கு’காப்புரிமை பெற்றது.
அதாவது இந்த லட்டுக்கு, ‘வேறு எங்கும் கிளைகள் கிடையாது. அப்படி இருந்தால் அது திருப்பதி லட்டே கிடையாது’. சுமார் 750 கிராம் கொண்ட அஸ்தானம் என்கிற ஒருவகை விசேஷ லட்டு, சிறப்பு நாட்களில் தயாரிக்கப்படுவது உண்டு. நமக்கு கிடைக்கும் புரோக்தம் என்கிற வகை லட்டுதான் 175 கிராம் எடை கொண்ட பக்தர்களுக்கான லட்டு. சரி.. இத்தனை சிறப்பம்சம் பொருந்திய இந்த லட்டின் மூல சூத்திரத்தை வகுத்து, முதன் முதலில் தயாரித்த அந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா? அவர்தான் ‘லட்டு அரசர்’ என்கிற புனைப்பெயரில் அழைக்கப்படும் கல்யாணம் அய்யங்கார். #லட்டு எடுங்க கொண்டாடுங்க #திருப்பதிலட்டுடே
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் யார் தெரியுமா?' .. எம்.எல்.ஏவின் மகன் பேசிய பேச்சு.. டிராஃபிக் போலீஸார் செய்தது என்ன தெரியுமா?
- தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!
- ‘கடத்தப்பட்ட 4 வயது சிறுவன்’... 'அதிரடியாக மீட்ட போலீஸ்'... பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி வீடியோ!
- 'ஜெகன் மோகனின் அதிரடி சட்டம்'... 'மகிழ்ச்சியில் ஆந்திர மக்கள்'!
- பூசாரி உட்பட 3 பேருக்கு.. ‘கோயிலுக்குள் நடந்த பயங்கரம்..’ மிரள வைக்கும் காரணம்..
- ‘அவசரமாக வந்த ஆம்புலன்ஸ்’ .. ஆந்திர முதல்வர் எடுத்த அதிரடி முடிவு.. குவியும் பாராட்டுக்கள்..!
- 'கண்ண பெருசாக்குனா பயந்துருவோமா?'.. 'நாங்க மட்டும் அங்க வந்தோம்னா'.. பரபரப்பு வீடியோ !
- ‘குழந்தை பெற்ற 7வது நாளில் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்..’ பெற்றோர் செய்த அதிர வைக்கும் காரியம்..
- 'ஆதார் கார்டில் ஏன் சாதி பெயர் இல்ல?'... 'மணமகன் செய்த அதிர்ச்சி காரியம்'... 'மணக்கோலத்தில் உறைந்துபோன மணமகள்'!
- ‘நண்பருக்காக காத்திருந்த சிறுமிக்கு நடந்த பயங்கரம்..’ 6 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல்..