'சுதந்திர' தினத்த கொண்டாட... காரில் கிளம்பிய 'இளைஞர்கள்'!!... திரும்பி வர்ற 'வழி'ல... 'மலையுச்சி'யில் வைத்து எதிர்பாராமல் நடந்த 'கோரம்'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்து ஒன்று, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி என்னும் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள், கடந்த சனிக்கிழமையன்று 74 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அதனைக் கொண்டாட வேண்டி, அங்கிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலுள்ள குர்சியோங் என்னும் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து சனிக்கிழமை இரவு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த வழியில், கார்கில் தாரா என்னும் பகுதியை அடுத்த ரோகிணி ரோடு என்னும் மலைப்பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கார் அங்கிருந்து சுமார் 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் இரண்டு இளைஞர்கள் உடலை ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்ட நிலையில், மேலும் இரண்டு பேர் உடல்களை இன்று காலை மீட்டனர். நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதில் மூன்று பேர் கல்லூரி மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. ஐந்தாவது நபரான ராஜ் சிங் என்பவரது உடல் மட்டும் இன்று மதியம் வரை மீட்கப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமை இரவு 11 மணியளவில் காரில் இருந்த இளைஞர்கள் தங்களது குடும்பத்தாரிடம் தொலைபேசியில் பேசியதாக இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இது சரிபட்டு வராது... போடுறா 'ஜூலை 31' வர லாக்டவுன... அதிரடியாக அறிவித்த 'மாநிலம்'!
- 'Work From Home' செய்றவங்க... 'கரெக்டா' பண்றாங்களான்னு 'செக்' பண்ண... 'ஆஃப்' ஒண்ணு கண்டுபுடிச்சுருக்காங்க!
- இந்த நிலைமை எந்த 'பொண்ணுக்கும்' வரக்கூடாது... 'வீல் சேரில்' வைத்தே... 'கர்ப்பிணி' பெண்ணிற்கு நடந்த 'பிரசவம்'... இறுதியில் நடந்தேறிய 'கொடுமை'!
- 'இந்த' மாநிலத்துல தான் 'உயிரிழப்பு' அதிகம்... ஒழுங்கா 'ஒத்துழைப்பு' குடுக்கல... 'பகீர்' குற்றச்சாட்டு!
- 'ஊரடங்கு நேரம்'... 'காலியான' சாலையில் "அசுர" வேகத்தில் வந்த 'கார்'... நடந்து சென்ற மூவருக்கு நேர்ந்த 'பரிதாபம்'!
- அட, யாரு பாத்த 'வேலை'யா இது ... திருத்தம் செய்த 'வாக்காளர் அடையாள அட்டையில்' ... 'அதிகாரி' கையெழுத்துடன் நாயின் படம்
- 'மச்சான் வாந்தி வருது வண்டிய நிறுத்து'... 'நொடிப்பொழுதில் பல்டி அடித்த கார்'... பதற வைக்கும் சம்பவம்!
- தள்ளிப்போன ‘கிராண்ட்’ வெட்டிங்... ‘கடமை’ தவறாத ‘காதலர்கள்’ செய்த காரியத்தால்... ‘வைரலாகும்’ திருமணம்...
- 'போலீஸ்' பூத் மேல் கார் மோதி விபத்து... "ஐயோ பாவம்..." "ஆனா அதை செல்ஃபி எடுத்து ட்விட்டர்ல போட்ட பாரு..." "நீங்கதான் தம்பி முக்கியமான ஆளு..."
- மீண்டும் 'பஸ்ஸில்' ஒரு சம்பவம் ... 'அலறிய' போதும் யாரும் உதவவில்லை... 'விடாமல்' விரட்டி பிடித்த போலீஸ்...!