கொரோனாவால் இறந்த முதியவர்... 'காரியம்' முடிஞ்சதுக்கு அப்புறம்... எதிர்பாராத திருப்பம்!.. ஈமச்சடங்கின் போது நடந்த 'அதிசயம்'!.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனாவால் உயிரிழந்ததாக எரியூட்டப்பட்ட நபர், ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த 75 வயது முதியவர், ஷிப்தாஸ் பானர்ஜி. இவர் கடந்த நவம்பர் 4ம் தேதி அன்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நவம்பர் 13 அன்று, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, இறந்த உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு பின்னர், ஷிப்தாஸின் ஈமச்சடங்குகளுக்கு தயாராகிக் கொண்டிருந்த குடும்பத்தினருக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

அப்போது, ஷிப்தாஸ் இறக்கவில்லை என்றும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் கூறியுள்ளனர்.

இதைக் கேட்ட ஷிப்தாஸ் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 75 வயது நிரம்பிய மோகினிமோகன் மூகர்ஜி என்பவரின் மருத்துவ அறிக்கைகள் ஷிப்தாஸின் மருத்துவ அறிக்கைகளோடு கலந்துவிட்டதாகவும், அவரது உடலை தவறுதலாக ஷிப்தாஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்ததால், உடலை முழுவதுமாக கவர் செய்து கொடுப்பது தான் வழக்கம். அதன் காரணமாக, ஷிப்தாஸ் குடும்பத்தினராலும் அடையாளம் காண முடியாமல் போனது.

பின்னர், ஷிப்தாஸ் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வந்து, அவரை அழைத்துச் சென்றனர்.

இதனிடையே, மருத்துவமனையின் இந்த அலட்சிய போக்கிற்கு, கடுமையான விமர்சனங்கள் எழுந்துவருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்