திடீரென விமானத்தில் கூடுகட்டிய தேனீக்கள்!.. விமான நிலையத்தில் பரபரப்பு!.. 'அப்படி அந்த விமானத்தில என்ன இருந்திருக்கும்'?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்கத்தில் விமானத்தில் கூடுகட்டிய தேனீக்களை தீயணைப்புத்துறையினர் தண்ணீர் அடித்து விரட்டினர்.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் விஸ்தாரா நிறுவனத்தின் விமானம் நின்று கொண்டிருந்தது.

அப்போது விமானியின் அறைக்கு அடுத்தாற் போல ஆயிரக்கணக்கான தேனீக்கள் கூடுகட்டத் தொடங்கின.

விமான நிலையத்தின் அருகிலோ, விமான ஓடுதளத்தின் அருகிலோ தேனீக்கள் இருக்கும் அளவிலான பெரிய மரங்கள் இல்லை. இதனால், தேனீக்கள் எங்கிருந்து வந்தன என்பது புரியாத புதிராக இருந்துவருகிறது.

எனினும், கொல்கத்தாவில் விமானங்கள் தாமதமாக புறப்படுவதற்கு தேனீக்கள் காரணமாவது இது முதல் முறையல்ல.

இந்த நிலையில், நேற்று விமானத்தின் ஜன்னல் பகுதியில் மிக விரைவாக தேனீக்கள் கூடுகட்டுவதை கண்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தேனீக்களை கலைத்தனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்