'மது இனிமேல் வீட்டுக்கே வந்திடும்...' 'ஒரு போன் மட்டும் பண்ணி ரிசர்வ் பண்ணிடுங்க...' மேற்கு வங்க அரசின் அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசெல்போனில் ஆர்டர் செய்பவர்களுக்கு மட்டும் தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிவிரைவாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியாவில் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது இந்திய அரசு.
மேற்குவங்கத்திலும் பின்பற்றப்படும் இந்த தடை சட்டத்தால், அத்யாவசிய தேவைகளுக்காக இயங்கும் கடைகளை தவிர மற்ற அனைத்து துறைகளை சார்ந்த நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டுள்ளது. ஆனால் இங்கு மதுபானக்கடைகள் மூட அனுமதி இல்லை. ஆனால் பெரும்பாலான இடங்களில் மக்கள் கொரோனா வைரஸிற்கு பயந்து மதுபானக்கடைகளை மூடி உள்ளனர்.
அதனால் தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் சில கட்டுப்பாடுகளுடன் வீடுகளுக்கு நேரிடையாக மதுபானம் விநியோகிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் அந்தந்த பகுதிகளில் செயல்படும் காவல் நிலையங்கள் மூலம் மதுபானக்கடைகளுக்கு பாஸ் வழங்கப்படும் எனவும், ஒரு கடைக்கு அதிகபட்சம் 3 பாஸ்கள் தான் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மதுபானம் வாங்குபவர்கள் முதலில் அதற்காக அருகில் இருக்கும் மதுபானக்கடைகளை போனில் அழைத்து முன்பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு சில்லறை விற்பனையாளர்கள் முன்பதிவு செய்தவர்களுக்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை வீடுகளுக்கு தேடிச்சென்று மதுபானம் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க அரசு, சமீபத்தில் இனிப்பு கடைகளுக்கும் அதன் வேலை நேரத்தை தளர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கள்ளச்சாராயம் காய்ச்ச இந்த இடம் தான் கெடச்சுதா...?' 'கடுப்பான சாராய கும்பல் நாட்டு துப்பாக்கியை எடுத்து...' பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்...!
- 'என்னங்க ஆன்லைன்ல விஸ்கி வாங்கலாம்'...'சந்தோஷத்தில் ஆர்டர் செய்த மனைவி'...இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
- 'சார்... அந்த வீட்ல கஞ்சா வியாபாரம் நடக்குது...' 'ரேட் எவ்வளவு சொன்னாலும் சாராயம் வாங்க ரெடியா இருந்தாங்க, அதான்...' கள்ளச்சாராயம் காய்ச்சிய கணவன் மனைவி வாக்குமூலம்...!
- 'கொரோனாவ விட இது பெரிய சிக்கலா இருக்கு!?'... ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்... 'மதுபானம்' விநியோகிக்க கேரள அரசு முடிவு!... என்ன காரணம்?
- 'பதுக்கி வச்சு அங்கெல்லாம் சேல் பண்றங்க...' '144 தடை உத்தரவையும் மீறி மது விற்பனை...' போலீசார் விரைந்து நடவடிக்கை...!
- முதல்ல டிஸ்டன்ஸ், அப்புறம் தான் சரக்கு... ஒரு மீட்டர் இடைவெளியில் நீண்ட வரிசையில் நின்று... சுகாதாரத் துறையின் அறிவுரைப்படி நடக்கும் பொறுப்பான 'குடி'மகன்கள்...!
- 'அவங்க 4 பேரும் ஃபுல் மப்புல வந்தாங்க...' 'கார்ல தான் பிக்கப் பண்ணிருக்காங்க...' 'சரக்கு வாங்கி கொடுத்தது யாருன்னு கரெக்ட்டா கண்டுபிடிச்சு...' பின்னி பெடலெடுத்த சம்பவம்...!
- 'வீட்டிலேயே பாட்டில், மூடி, ஸ்டிக்கர்லாம் ரெடி பண்ணியாச்சு...' 'ஸ்பிரிட் வாங்க போன டைம்ல தான் வசமா...' கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம்...!
- 'தண்ணி மெதுவா வரும்னு பாத்தா... மதுவா வருது!'... பீதியடைந்த குடியிருப்பு வாசிகள்... திகைப்பூட்டும் சம்பவத்தின் பின்னணி என்ன?
- 'ஹலோ.. நூறா?'.. 'இங்க கொஞ்சம் வந்து, இந்த ஐட்டத்தை வாங்கித் தர்றீங்களா?'.. இளைஞர் கேட்ட 'வேறலெவல்' உதவி!