‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை, பயங்கரமாக அடிபட்டநிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் ஜல்பாய்குரி பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது கடந்த வெள்ளிக்கிழமையன்று ரயில் மோதியது. இதில் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடியவாறு காயங்களுடன் யானை தண்டவாளத்தில் இருந்து நகர்ந்து காட்டுக்குள் சென்ற, நெஞ்சை உலுக்கும் காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவின. பாலிவுட் நடிகர்களான ரந்தீப் ஹூடா மற்றும் சோனு உள்ளிட்டோர் வீடியோவை பகிர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த யானையை கண்காணித்து சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த யானை சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமையன்று மாலை உயிரிழந்துள்ளது. உள்காயம் அதிகம் இருந்ததால் அந்த யானை உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் வன விலங்குகளை பாதுகாக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ELEPHANT, VIRALVIDEO, ACCIDENT, NORTHBENGAL, INTERCITYEXPRESS, TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்