"நல்லா சிரி தாத்தா.." 100 ஆவது வயதில் மீண்டும் திருமணம்.. குடும்பத்தினர் புடை சூழ நடந்த திருவிழா
முகப்பு > செய்திகள் > இந்தியாWest Bengal : 100 வயதாகும் முதியவரின் பிறந்தநாளை, வேற லெவலில் கொண்டாடத் திட்டம் போட்டு, அதனை அசத்தலாக நிறைவேற்றியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.
மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஸ்வநாத் சர்கார். முதியவரான இவரின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினர் மிகவும் ஸ்பெஷலாக அவரின் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
பிஸ்வநாத்தின் 6 குழந்தைகள், 23 பேரக் குழந்தைகள் மற்றும் 10 கொள்ளு பேரக் குழந்தைகள் ஆகியோர் இணைந்து, ஒரு அசத்தல் பிளானையும் போட்டுள்ளனர்.
குடும்பத்தினர் முடிவு
அதன் படி, பிஸ்வநாத்திற்கும், அவரது 90 வயது மனைவியான சுரோத்வாணிக்கும் மீண்டும் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். விவசாயியான பிஸ்வநாத், கடந்த 1953 ஆம் ஆண்டு, சுரோத்வாணியை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண நாளை மீண்டும் ஒருமுறை குடும்பத்தினருடன் மிகவும் விமரிசையாக நடத்தி, மிகவும் சிறந்தவொரு நாளாக மாற்ற குடும்பத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.
எல்லாரும் சப்போர்ட் பண்ணாங்க
இந்த ஆலோசனை பற்றி வயதான தம்பதியினரின் மருமகள் கீதா சர்கார் பேசுகையில், 'மீண்டும் திருமணம் செய்யும் இந்த ஐடியாவை, சமூக வலைத்தளத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன். அந்த ஆலோசனையை எனது குடும்பத்தினரிடம் பகிர்ந்தேன். அதற்கு அனைவரும் ஆதரவும் அளித்தனர்' என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, பிஸ்வநாத்தின் திருமண நிகழ்ச்சிக்காக, வேறு மாநிலங்களில் தங்கியிருந்த அவர்களின் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் மற்றும் கொள்ளு பேரக் குழந்தைகள் ஆகியோர், மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு வந்து ஒன்று கூடியுள்ளனர்.
திருமண நிகழ்ச்சி
பிஸ்வநாத்தின் பேரன்களில் ஒருவரான பின்றோ மண்டல் கூறுகையில், 'மாப்பிள்ளை வீட்டிற்கு, பெண் வருவது தான் சடங்கு. இதனால், அதற்கேற்றவாறு நாங்களும் திட்டம் போட்டோம். எங்களுடைய தாத்தா பாட்டி, பெனியாபுகூர் என்னும் கிராமத்தில் வசித்தாலும், அங்கிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ள பானும்னியா என்னும் கிராமத்தில், எங்களின் பூர்வீக இல்லம் உள்ளது. பாட்டி சிரோத்வாணியை இரண்டு நாட்களுக்கு முன்பே அங்கு அழைத்துச் சென்று, மணப்பெண்ணைத் தயார் செய்யும் வேலையில் இறங்கினோம்' என தெரிவித்தார்.
பட்டாசு வெடித்து வரவேற்பு
பிஸ்வநாத்தினை அவரது பேரன்களும், சிரோத்வாணியை அவரது பேத்திகளும் திருமணத்திற்காக தயார் செய்திருந்தனர். கடந்த புதன்கிழமையன்று, பாமுனியா கிராமத்திற்கு சென்று தன்னுடைய மணப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார் பிஸ்வநாத். குதிரையில் வந்த அவருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய திருமண உடையில் இருந்த திருமண ஜோடி, பணத் தாள்களால் ஆன மாலையை மாற்றிக் கொண்டனர்.
'எனது பிள்ளைகள், சிறப்பான விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்' என பிஸ்வநாத், உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த திருமண நிகழ்ச்சிக்கு, கிராமத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டான்சருடன் உருவான காதல்.. லவ்வர்'ன்னு நம்பி கூல் டிரிங்க்ஸ் குடிச்சதில் பெண்ணுக்கு வந்த வினை.. பதற வைக்கும் சம்பவம்
- நீங்க தாம்பத்தியத்தில் active- ஆ?.. தப்பா புரிஞ்சுகாதீங்க.. டாக்டர் தந்த முக்கிய அட்வைஸ்..!
- நண்பன் மனைவியை கல்யாணம் செய்த நபர்.. ‘இதுக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு வேணும்’.. குவியும் வாழ்த்து..!
- அந்த ஊருக்கெல்லாம் பொண்ணு தரமாட்டோம்.. கிட்டத்தட்ட 50 பேரு 45 வயசாகியும் திருமணம் ஆகாம இருக்காங்க.. என்ன காரணம்?
- சுனாமியில் மீட்கப்பட்ட 9 மாத குழந்தை,, 'சௌமியா திருமணம் மனிதநேயத்தின் உச்சம்'.. நெகிழ வைத்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்
- மனைவி சம்மதம் இல்லாமல் கணவர் கட்டாய தாம்பத்திய உறவு கொள்வது கிரிமினல் குற்றமா..? சூடான விவாதம்.. அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்..!
- டான்ஸ் ஆடுனது பிரச்சனை இல்ல.. IT மாப்பிள்ளையை மாத்துனத்துக்கு காரணம் இதுதான்.. மணப்பெண் பரபரப்பு குற்றச்சாட்டு..!
- இந்தியாவின் முதல் மெட்டாவெர்ஸ் திருமணம்! எவ்வளவு செலவாகும்? அசத்திய தமிழக ஜோடி
- கல்யாணம் பண்ண ஒரு பொண்ணு கூட கிடைக்கல.. சாமியாராகி ஊருக்கு வந்து சொன்ன அருள்வாக்கு.. அப்படியே பலிச்சிடுச்சு!
- கல்யாணத்துக்கு வந்து அலைய வேணாம்.. ஸ்ட்ரைட்டா கூகுள் மீட் வாங்க.. அசத்தும் ஜோடி! ஆனா சாப்பாடு எப்படி? அதான் ஹைலைட்டே!