‘என்னங்க கிணத்து தண்ணி தீ பிடிக்குது’!.. மிரண்டு போன ஊர்மக்கள்.. ஒருவேளை ‘இது’ காரணமா இருக்குமோ..?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கிணற்று தண்ணீர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

கேரள மாநிலம் பாலக்காடு அருகே திருத்தாலா அடுத்து கூற்றநாடு என்ற கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் பெரும்பாலான வீடுகள், கடைகளில் கிணறுகள் உள்ளன. கிணற்று தண்ணீரைத் தான் இப்பகுதி மக்கள் பலர் குடிநீர் உள்பட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள சில வீடுகள் உள்ள கிணற்று தண்ணீரில் பெட்ரோல் வாசனை அடித்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதியினர், ஒரு வாளியில் தண்ணீரை பிடித்து தீ பற்றவைத்து பார்த்துள்ளனர்.

உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் தண்ணீரில் மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. பெட்ரோல் போல தண்ணீரில் தீ பிடித்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து கிணற்றில் தீயை கொளுத்திப் போட்டுள்ளனர். அப்போது கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதும் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியுள்ளது.

கூற்றநாடு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள கிணறும் இதேபோல் இருந்துள்ளது. இதனை அடுத்து சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே விரைந்து வந்த அதிகாரிகள், கிணற்று நீரை சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருவதால், ஏதாவது உடல் நலக்கோளாறு ஏற்படுமோ? என்ற அச்சம் இருப்பதால் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். அதனால் கிணற்று தண்ணீரை பயன்படுத்துவதை தவிர்த்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடுகளுக்கு அருகே ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. ஒருவேளை அங்கிருந்து பெட்ரோலோ, டீசலோ கசிந்து கிணற்றுத் தண்ணீரில் கலந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

KERALA, WELL, FIRE, PALAKKAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்